Saturday, April 14, 2007

பரீட்சை பயம்

அன்பு குழந்தைகளே!
பரீக்ஷைக்கு நன்கு படித்து முடித்து விட்டிருப்பீர்கள், இப்போது மேலும் சில அறிவுரைகள் சொல்கிறேன்... முதலில் தேக ஆரோக்கியம் முக்கியம் இல்லையா? ஆகையால் இந்த நாட்களில் கூடிய வரை வீட்டில் செய்யும் உணவுகளையே உட்கொள்ளுங்கள், மிகுந்த எண்ணைப் பண்டமோ fast food என்ப்படும் அவசர உணவு, வெளியில் விற்கும் பண்டங்களை சாப்பிடாதீர்கள் சுத்தமான குடி நீரைக் குடியுங்கள்.
படித்துக் கொண்டே இராமல் வெளியில் காற்றோட்டமாக நடந்து சில தேகப் பயிற்சிகளைச் செய்யவும், மூளைக்கு சற்று ஓய்வு தேவை.

அந்த நேரத்தில் சற்று நேரம் பிடித்த இசையைக்கேட்டு அனுபவியுங்கள். டென்சன் அல்லது பரபரப்பு வர இடம் கொடுக்காதீர்கள்.பரீட்சைக்கு அரை மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு போய் விடுங்கள்.
உங்கள் ஆழ்மனதில் நான் நன்கு பரீட்சை எழுதி வெற்றி பெறுவேன்! என்று சொல்லிக் கொள்ளுங்கள், முதல் நாளிலேயே மறு நாளுக்கு தேவையான எல்லா பொருளும் ரெடியாக எடுத்து வைத்தால் டென்சன் வராது. இப்போது பரீட்சை ஹாலில் அமர்ந்து விட்டீர்கள், வினாத்தாளும் வந்து விட்டது, ஒரு நிமிடம் மனதில் கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்து பின் படிக்க ஆரம்பியுங்கள் கவனமாக முதலிலிருந்து கடைசி வரை படியுங்கள். பின் அதிகமான மார்க்கு கேள்விகளை எடுத்து மிகவும் நன்றாக தெரிந்த வினாவிற்கு விடை கொடுங்கள்.
எத்தனைத் தேவையோ அதை தான் எழுத வேண்டும். திரும்ப திரும்ப எழுதியதே எழுத வேண்டாம். பின் 5 மார்க வினாக்கள், பின் 2மார்க், பின் ஒரு மார்க் என்று எளிதாக முடித்து விடலாம் மணியைப் பார்த்து விடைகளை முடிக்க வேண்டாம் கணக்கில்
roughwork பரிசோதிக்கும்தாள் தனியாக வைத்து அதற்கு சரியாக நம்பர் போட வேண்டாம். பின் அதையும் கணக்கு விடைத்தாளுடன் சேர்த்துக் கொடுக்கவும்.
கடைசியில் திரும்ப சரி பார்க்க ஒரு பத்து நிமிடம் அவகாசம் தேவை.
காபி அடிப்பது... ஊஹூம்...
அதைப் பற்றி நினைத்து கூட
பார்க்க வேண்டாம் நேர்மைக்கு பரிசு எப்போதும் உண்டு, அதே போல் பிறர் காப்பி அடிக்க நீங்கள் உதவவும் கூடாது.
இதற்கு ஒரு கதை...
ஒரு தடவை ஸ்ரீ காந்தீஜி பள்ளிக்கு சென்றிருந்தார், அன்று அந்தப் பள்ளிக்கு கல்விஅதிகாரி வந்திருந்தார். இவருடைய வகுப்பும் வந்தார், அப்போது ஆங்கிலம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் ஆங்கிலத்தில் சொற்கள் டிக்டேஷன் கொடுத்து கொண்டிருந்தார்.அவர் சொன்ன ஒரு சொல் கெட்டில் kettle அதை ஸ்ரீ காந்தீஜி தவறாக எழுதினார்,

ஒரு பிழை இருந்தது, ஆசிரியர் நடந்து கொண்டு வந்த வேளையில் தற்செயலாய் அந்தப் பிழையைப் பார்த்தார். உடனே ஆசிரியர் செய்கையினால் அடுத்த மாணவனைப் பார்த்து எழுத தூண்டினார். ஆனால் மோஹன் என்ற காந்தீஜி அதைச் செய்யவில்லை...ஆனாலும்
ஆசிரியர் மீது மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவும் இல்லை அதைப் பிறரிடம் சொல்லவும் இல்லை. என்ன நல்ல குணம்? பாருங்கள்! நிங்களும் அந்தப் பாதையைக் கடைப் பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பரீட்சை முடிந்த பின் உத்தேசமாக எத்தனை நன்றாக செயதிருக்கிறீர்கள்...
என்று பார்த்துக் கொள்ளவும். பின் ஹாலிலிருந்து எல்லா பொருட்களும் மறக்காமல் எடுத்து வரவும். உங்க்ளுக்கு என் அன்பு கனிந்த வாழ்த்துக்கள்

அன்புடன் அம்மம்மா...


No comments: