Friday, April 6, 2007

உண்மை தீபாவளி!



குதூகல தீபாவளியின் வருகை,
எங்கும் பொருட்களின் சலுகை,
தண்ணீர் போல் காசின் சிலவு
அதனால் குறைந்து போகும் வரவு
கடனில் வாங்கும் பட்டுப் புடவை
படையெடு, கடைக்கு பலதடவை
இந்தக்கலர், அந்தக்கலர், எந்தக்கலர்?
இவைகளில் மலர்ந்து நிற்கும் மங்கை மலர்
மேலும் வாங்கும் பட்டாசு வெடி
காசைக் கரியாக்கும் முதல் படி
ஆனந்தம் அனுபவிப்பது முக்கியம்தான்
அதை பெறும் வழியை நிணயிப்பதும் நாமேதான்
உன் வீட்டை விளக்கேற்றும் நீ
ஒரு ஏழை வீட்டிலும் விள்க்கேற்றப்பா,
வெளியில் அகல் தீபம் ஏற்றிய நீ
உன் மனதிற்குள்ளும் புகுந்து பாரப்பா
உன் வீட்டைச் சுத்தம் செய்த நீ,
மனத்தில் அழுக்கை சுமக்கிறாயப்பா
வீடு முழுவதும் தீப ஒளி வீச
உன் மனத்தில் இருள் சூழ்வதேனப்பா?
அதில் எந்த தீபம் ஏற்றுகிறாய்?
எந்த ஒளியை உணருகிறாய் ?
அன்பு தீபம் ஏற்றப்பா
அதன் ஒளியை நன்கு பரப்பப்பா.
உன் அழுக்கை அழிக்க முயலப்பா
உண்மை தீபாவளி இதுதானப்பா!


விசாலம்

No comments: