Saturday, April 21, 2007

திருவிளக்கே! -தமிழ் பாடல்


அன்பு ராஜா ராஜ் இந்த குத்துவிளக்கின் தமிழ் பாடலைக் கேட்டிருந்தார். எல்லோருக்கும் உப்யோகப் படவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன் விளக்கேற்றி வைத்தப் பின் இதைச் சொல்வது உண்டு.


விளக்கே... திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணி விளக்கே சீதேவிப் பொன்மணியே!
அந்தி விளக்கே அலங்கார பெண்மணியே!
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே !
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்!
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க!
மாளிகையின் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்
மாங்கலயப் பிச்சை மடிப் பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா !
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லும் அம்மா!
அல்லும் பகலும் அண்டையில் நில்லும் அம்மா!


இந்தப் பாடலை ஞாபகம் செய்த பின்னர் எனக்கு ருத்ரத்துடன் வரும் சமகம் ஞாபகம் வந்தது. அதில்


"சஞ்சமே மயஸ்சமே பிரியம்சமேனு காமஸ்சமே"
என்று எல்லாம் கிடைக்கட்டும் என்ற அர்த்தத்தில்
வேதம் சொல்லுகிறது அதை பற்றி பிறகு சொல்கிறேன்

அன்புடன விசாலம்

No comments: