Thursday, April 5, 2007

புது காக்கா கதை



அன்பு குழந்தைகளே! உங்கள் எல்லோருக்கும் ஏமாந்த காகம் கதை தெரியும் இல்லையா?
"காக்கா காக்கா ஒரு பாட்டு பாடு என்று தந்திரமான குள்ளநரி கேட்க, கவனமில்லாமல் வாயில் வடை இருப்பது தெரியாமல் அசட்டு காகம் வாயைத் திறந்து பாட, வடையும் கீழே
விழுந்து விட,

நரியும் ஏமாற்றி வடையைப் பெற்றது இல்லையா?
இப்போது இந்த சாதுர்யமாக தன் மூளையை உபயோகித்த காகத்தின் கதையைப் பார்ப்போமா?
பின் ராகம் போட்டு இசையுடன் பாடுங்கள்...


அம்மா காகம் அழைத்தது,
"காக்கா...கா...கா...கா..."

பறந்து வந்தது குழந்தைக் காகம்
கறைந்தது "கா...கா...கா..."


அம்மா சொல்லியது அன்புடன்,

"எமாற்றாதே நீ ஒருவரையும்,
ஏமாறாதே..! இரு கவனமுடன்,
நீ செய்யும் வேலை எல்லாம்
புத்திக் கூர்மையுடன் இருக்கட்டும்.
காகா...காக்கா...கா...சரியம்மா."
மகிழ்ந்து போனது குஞ்சுக் காக்கை
ஒரு தின்பண்டக் கடை மேல் பறந்தது.
கடையுடன் வடையையும் பார்த்தது
வடை வாங்க ஒரு பையன் வந்தான்
கையில் வாங்கி வடையைப் பார்த்தான்
வடை தவறி கீழே விழவும்
குஞ்சுக் காக்கா கொத்திப் பறந்தது
மேலே மரத்தின் கிளையில் அமர,
எல்லாம் ரசித்த நரி ஒன்று வர,
வடையை அடைய முயன்றது.

"காக்கா...காக்கா...கீழே பார்
நீ அழகாய் பாட்டு பாடுவாயே!
ஒன்று பாடிக் காட்டுவாயா ?"


"ஓ பாடுவேனே!" என்றபடி
வாயின் வடையைக் காலில் சொறுகி,
"கா...கா..." என்றும் பாட
நரியும் ஏமாந்து திரும்பியது.


அன்புடன் உங்கள் அம்மம்மா விசாலம்

No comments: