Friday, April 6, 2007

பாட்டி

பாட்டி நல்ல பாட்டி
அன்புப் பொழியும் பாட்டி ,
தீபாவளிக்காலை என்னை
எழுப்பிவிட்ட பாட்டி
சோம்பிப் படுத்த எனக்கு
பட்டாசு காட்டிய பாட்டி
தலையில் எண்ணெய் வைத்துவிட்டு
பாட்டுப் பாடிய பாட்டி
கங்கா ஸ்னானம் ஆச்சு என்று
பட்டுடைக் கொடுத்த பாட்டி
ஸ்லோகத்துடன் ல்ட்சுமி பூஜை
குபேர பூஜையுடன் வயிறுக்கும் பூஜை
அன்பு கலந்த இனிப்புகள்
அள்ளி வழ்ங்கும் பாட்டி
முற்றம் முழுதும் விளக்கு வைத்து
மத்தாப்பூ ஏற்றிகொடுத்தப் பாட்டி
அமெரிககாவில் என் பெற்றோர் இருக்க
எனக்கு எல்லாம் நீதான் பாட்டி


அன்புடன் விசாலம்,

No comments: