Sunday, April 8, 2007

அதிதியின் மகனே ஆதவனே !


அதிதியின் மகனே ஆதவனே

ஏழு குதிரையில் வருபவனே

மழை கொடுத்து வளம் செய்பவனே

தேஜஸ்வரூபியே வேதவாகனனே

கிரணங்களைப் பரப்புபவனே,

கிரஹங்களுக்குத் தலைவனே

இருள் யானைக்குச் சிங்கமானவனே,

உலகத்தின் கண்ணானவனே

சனிக் கிரஹத்தின் தகப்பனே,

வியாதியைப் போக்குபவனே,

திருஷ்டியைத் தெளிவாக்குபவனே

உடலில் ஒளியைக் கொடுப்பவனே

காயத்திரி மந்திரத்தில் ஒளிர்பவனே

எங்கள் மனதின் இருளை நீக்கி

ஞானம் என்ற ஒளியைத் தா!

"ஆதித்யஹிருதயம் புண்யம் சர்வசத்ரு வினாசனம்

ஜயாவஹம் ஜபேன் நித்யம் அக்ஷய்யம் பரமம்சிவம்"

சூரியனுடைய ஹிருதயத்தில் வசிக்கும் ஸ்ரீ பகவானுடைய அனுக்கிரஹம் கொடுக்கும் இந்தத் தோத்திரத்தை நித்தியம் படித்தால் சத்ருக்கள் அழிவார்கள். எப்போதும் ஜயமுண்டு!
புண்ணியம் கிடைக்கும் என்று ஸ்ரீ அகஸ்திய மகா முனிவர் ஸ்ரீ ராமருக்கு இராவணனை வதம் செய்யும் முன் சொல்லித்தந்த மந்திரம். ஸ்ரீ வால்மீகி இரமயணத்தில் வருவது, நாமும் இன்றைய பொங்கல் தினத்திலாவது இதைப் படிக்கலாமே!

அன்புடன் விசாலம்

No comments: