Thursday, April 5, 2007

தீபம்!

கார்த்திகை தீபம் வரிசையாக சுடர் விட பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான்.தீபத்திற்கு எந்த எண்ணெய் விட்டால் என்ன பலன் என்பதை ஒரு ஆன்மீகப் புத்தகத்தில் முன்பு படித்தேன், அதை உங்களுக்கும் சொல்கிறேன்.
நெய்-சகலவிதமான செலவம் கணபதி மஹாலட்சுமிக்கு உகந்தது.
நல்லெண்ணெய்-எல்லா பீடைகளும் விலகும்.{நாரயணன்}
விளக்கெண்ணை புகழ் ப்ந்து சுகம் தாம்பத்திய சுகம்
கடலை எண்ணெய்-ஏற்றுவதைத் தவிர்க்கவும்.
தேங்காய் எண்ணெய்-கணபதிக்கு உகந்தது.
இலுப்பை எண்ணெய்-ருத்ராபதிக்கு உகந்தது.
ஐந்து வித எண்ணெய் கலப்பு-நெய் வேப்பஎண்ணை விள்க்கெண்ணை, தேங்காயெண்ணை ஒரு மண்டலம் ஏற்ற - தேவியின் அருள்.
மூன்று வித எண்ணெய்-வேப்பெண்ணை,நெய்,இலுப்பெண்ணை-செலவம். குலதெய்வம் திரி வகைகள்
பஞ்சு திரி-மிகவும் நல்லது.
தாமரைத் தண்டு-பாவம் போக்கும், செல்வம் நிலைத்து நிற்கும்.
வாழைத்தண்டு-குழந்தைச்செல்வம், தெய்வக் குற்றம் நீங்கும்.
வெள்ளை எருக்கன் பட்டை தீபம்-பெருத்த செலவம்.
புது மஞ்சள் துண்டு திரி-வியாதி குணமாகும்.
புது வெள்ளை வஸ்திரம் - உத்தம பலன்.
முகம் ஏற்றுவது, ஒருமுகம்-சுமார் பலன்.
இரு முகம்-குடும்ப ஒற்றுமை.
மூன்று முகம்-புத்திர சுகம்.
நாலு முகம்-பசு,பூமி பெருகும்.
ஐந்து முகம் ஏற்ற-செல்வ வளம்.
தோஷங்கள் நிவிருத்தி.

ராகு தோஷம்- 21 தீபம்.
சர்ப்ப தோஷம்-48 தீபம்.
கால சர்ப்ப தோஷம்-21 தீபம்.
களத்திர தோஷம்-108 தீபம்.
திருமணதோஷம்-21 தீபம்.
புத்திர தோஷம்-51 தீபம்.
நம்பினவர்களுக்கு நாராயணன்என்பார்கள்.

இதை செயவதில் குடும்பத்திற்கு நல்லது
என்பதால் செய்து பார்த்து பலன் பெறுக!


அன்புடன் விசாலம்.

No comments: