அன்பு ஷைலஜா என்னிடம் பாம்பன் சுவாமிகளைப் பற்றியும் எழுதும்படிக் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவளால் தான் திரும்பவும் அவர் சரித்திரத்தைப் படித்தேன், அவர் பற்றி நிறைய சம்பவங்கள் இருந்த
போதிலும் முக்கியமானதை எடுத்து கவிதைப் போல் எழுதுகிறேன், மற்ற சம்பவங்களை சிறிது சிறிதாக பிறகு எழுதுகிறேன். எல்லோரும் இந்த மஹான் வாழ்க்கையைப் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம், நன்றி!
1.பாம்பன் சுவாமிகள்...
வெள்ளிக் கிழமையில் அவதரித்த சூரியோதயமே,
திரு.சாத்தப்ப செங்கமலத்தின் தவச்செல்வமே,
"அப்பாவு"என்ற நாமத்துடன் விளங்க,
சர்வமதமும் சம்மதமாகக் கண்டவரே!
நாகநாதர் கோவில் பிரும்மோத்சவம் நாளில்
"சிவ சிவ"என்ற நாமம் உச்சரிக்க,
அம்மந்திரத்திற்குள் மூழ்கிவிட்டவரே!
"சஷ்டிக்கவசம் அவரை ஈர்க்க,
தானும் அதைப் போல் பாடத் துடிக்க
முருகன் அருளும் பூரணமாய்க் கிட்ட
"கங்கையைச்சடையில் பரிந்து"என
அடிகளும் எடுத்துக் கொடுக்க
நூறு நாடகளில் நூறு பாடல்கள்
'திருத்தணிகைப் பதிகம்' முடிந்து ஒளிர்ந்தது.
2.தான் கற்ற மந்திரம் கைவிட்டார்,
ஆசிரியர் கட்டளையை மதித்தார்
"குருசேது மாதமாதவைய்யர் செவியில் மந்திரம் ஓத,
சமஸ்கிருதம் படிக்க ஆர்வமும் காட்ட,
ஏழை எளியவர் தொண்டு புரிய
வளர்ந்தார்,மேலும் அன்பை வளர்த்தார்!
3. கனவில் வந்த பெரியார் ஒருநாள்,
வாழை இலையிட்டு பாலுஞ்சாதம்.
தன்னுடன் உண்ணத் தூண்ட இவரும்
அங்ஙணமே செய்து, விழித்துக் கொண்டார்
உடன் கவிபாடும் ஆற்றல் பெருக்கெடுக்க
இசையும் ஞானமும் கூடுதல் பெற்றது,
தன் குழந்தை பால் குடியாமல் அழ
தாயார் அதற்கு திருநீரும் கேட்க,
"ஆண்டவனைக் கேள்" என்று இவரும் சொல்ல
அன்னையும் அன்புடன் முருகனை முறையிட
தோன்றினார் காஷாய உடையில் ஒருவர்
பிள்ளையை வாங்கி திருநீரும் பூசினார்.
துறவற நாட்டம் மனதைத் தாக்க
நண்பரும் இவரிடம் இதைப் பற்றிக்கேட்க
"பழனி போகிறேன்" என்ற பொய்யும் சொல்ல
உத்தரவு பெற்றாயா? என்று நண்பரும் வினவ.
"ஆம்" என்று அழுத்தமாகச் சொல்ல,
கோபத்துடன் முருகனும் தோன்றி
"பொய் ஏன் பகர்ந்தாய் பக்தா நீ?
என் கட்டளை வரும் வரை பழனி வராதே"
அந்த வாக்கைக் காப்பாத்திய செம்மல்,
4.ஒரு சமயம் வமன பேதி இவரைத்தாக்க..
மூர்ச்சையாகி தரையில் விழவும்,
காஷாய குரு நேரே தோன்றி
கைப்பிரம்பால் அவரைத்தட்ட
திருநீரை இட்டு மரணத்தை நீக்க,
உயிர் பிழைத்து நின்றார் வென்றார்.
மயானத்தில் சதுரக்குழி அமைத்து,
மேலேக் கொட்டகையும் மூடி
நான்கு பக்கம் வேலியும் கட்டி,
"பிரப்பன் வலசைத் தவம் தொடங்க
"குமர குரு என்று முழங்கி யோகம் துவங்க
வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள,
பாம்பும் ஓட பேய்களும் சூழ ,
மேகத்தண்டத்தால் அவரும் அடிக்க
ஓடாத பேய் சரவணமந்திரத்தில் ஒடி மறைய
ஏழாம் நாள் முருக தரிசனம்
திருநீரும் பூசி உபதேசம் கொடுக்க
முப்பத்தைந்தாவது நாள் வெளியே வந்தார்.
5.பல க்ஷேத்திர தரிசனம்
மனமத ஆண்டு துறவு பூண்டு
சென்னை மண்ணை அன்புடன் மிதித்தார்
குதிரை வண்டி ஒன்று நிற்க
யாரோ ஒருவர் அழைத்துச் செல்ல
பங்காரு அம்மையார் வீட்டில் இறங்க
முன்னம் தினம் நாள் கனவில் தோன்றி
அன்னம் கேட்ட தகவலை சொல்ல
அங்கேயே அன்புடன் தங்கி
முதல் இடம் கொடுத்த அம்மையார்
என்றும் அவர் மனதில் நின்றார்.
'குமாரானந்தம்' நாமம் சூட்டினார்.
முருகனே அவரின் வைத்தியரானான்
தீராத நோய்களையும் தீர்த்து வைத்தான்.
6.தேகம் உலகம் மாயை ஆனது
தன் சீவனை முடித்து முக்திப் பெறவே
சொல்லாமல் கொள்ளாமல் திருவற்றியூர் செல்ல...
நடந்தே சென்றமையால் கால்கள் தளர
பசி வேதனையில், கள்ளிப் பழம் உண்ண
மரத்தடிகீழ் 'முருகா' என்று சத்தமிட
ஒரு பெரியார் தோன்றி சத்திரம் போக
உணவு கொடுத்து உபசரித்தனுப்ப
யார் அவர் சாட்சாத் முருகனேதானோ?
புதல்வன் மரணத்தை முதல் நாளே உணர,
வரிசையாக தன் இரு மகன்களை இழக்க
"வந்த காரியம் முடிந்தது" என்று சொல்ல
திரும்பவும் நிஷ்டையில் அமர,
இறைவன் சிந்தனையே முழுவது சூழ
பௌர்ணமி நாட்களில் கடலுக்குச் செல்ல
நீண்ட நேரம் போதனையில் கழிந்தது.
7, தம்புச்செட்டிதெருவில் ஒருநாள்
குதிரைவண்டி இவர் மேல் மோத
காலும் முறிய வைத்தியர்கள் கைவிட
மருத்துவனையில் பதினோறாம் நாள்
இரு மயில்கள் வந்து நடமாட,
அழகுக் குழந்தை இவரருகில் படுக்க,
ஒரு பக்தர் ஷண்முகக் கவசம் ஓத
சுவாமிகளின் காலை அழகு வேல் தாங்க
நிழல் படத்தில் காலும் பொருந்தியிருக்க
மருத்துவ மனையே கண்டு வியக்க
கால் சரியாகிக் கந்தகோட்டம் செல்ல,
தன் காலை சரியாக்கிய மயிலை நினைக்க,
'மயூர வாஹன சேவன் விழா' தொடங்க
அன்புக் கட்டளை இட்டார் அவர்.
8. பெங்களூர் வந்த ஒரு நாள் அவரும்
முருகன் நாமம் சூழப் படுத்தார்,
படுத்த உடனே பேரொளி கண்டார்.
இதயக்கமலம் எழுவதை உணர்ந்தார்
வேலும் மயிலும் அவலுடன் அழைத்தார்
பின் ஒளி மறைந்து இருள் சூழ்ந்தது
தன் முடிவு தெரிந்தது, சென்னை வந்தார்.
திருவான்மியூரில் நிலமும் பார்த்தார்.
தன் சுவாசத்தை இழுத்து உந்தியில் அடக்கினார்.
பகதர்கள் கண் கலங்க அந்த நாளும் வந்தது.
அந்த நாளும் ஷஷ்டி திதி
அவிட்ட நக்ஷதிரத்தில் ஜீவ சமாதி!
முருகன் ஒருவனையே பாடிய சுவாமி
போற்றி போற்றி பாம்பன் சுவாமி!
ஒம் சரவணபவ
அன்புடன் விசாலம்
Saturday, April 7, 2007
உயர்திரு.பாம்பன் ஸ்வாமிகள்!
Posted by Meerambikai at 12:51 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment