"கண்ணிற்கு மையழகு..! என்ற பாட்டு கேட்டேன் தவிர அந்தக் காலத்தில் தாயார் தன் குழந்தைக்கு "காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா! குருவி கொண்டைக்கு பூ கொண்டுவா! என்று பாட... குழந்தை தன் பொக்கை வாயைக் காட்டிச் சிரிக்க, ஆசையுடன் மடியில் இருக்கும் குழந்தையின் கண்ணில் மை இட்டு நெற்றியிலும் ஒரு திலகம் எழுதி, ஆஹா! அந்தக் காட்சியும் அன்னையின் முகத்தில் ததும்பும்
ஒரு பெருமிதமும் என்னவென்று சொல்வது?
பெண்கள் தங்கள் கண்களை மேலும் அழகாகிக்க அவர்கள் கண்ணிற்கு அழகைக் கொடுப்பது கண் மை,சின்ன கண்களை பெரிதாக
தெரியப்படுத்தலாம்.அவர்களைப் பார்த்தாலே ஆண்களும் சொக்கிப்
போவார்கள். இப்போது அந்த மையைப் பற்றிப் பார்ப்போம்!
மை மிகவும் சுத்தமாகத் தயாரிக்க வேண்டும், என் பாட்டி காலத்திலிருந்து
வீட்டிலேயே மை தயாரிப்பார்கள்.அதற்கென்று நல்ல நாள் பார்த்து வளர்பிறையுடன் நல்ல திதியுடன் செய்ய ஆரம்பிப்பார்கள். நல்ல கடுக்காயும் சந்தனமும் வழ வழ என்று இழைத்து ஒரு செப்பு பாத்திரத்தில் {பஞ்ச பாத்திரம்} அந்த விழுதை

பின் பக்கம் தடவி பின் குமுட்டி அடுப்பை மூட்டி மூன்று செங்கல் வைத்து அதை வைத்து விடுவார்கள்.
அந்தக் கடுக்காய் பேஸ்ட் கறுப்பாய் படலாக ஆனவுடன் அதை எடுத்து விளக்கெண்ணை
சில சொட்டுகள் விட்டு குழைத்து ஒரு அழகான வெள்ளி மைக்கூட்டில் அடைப்பார்கள். அதை தினமும் கண்ணிற்குள் இட்டு வர கண்ணிற்கு
அந்தக் கடுக்காய் பேஸ்ட் கறுப்பாய் படலாக ஆனவுடன் அதை எடுத்து விளக்கெண்ணை
சில சொட்டுகள் விட்டு குழைத்து ஒரு அழகான வெள்ளி மைக்கூட்டில் அடைப்பார்கள். அதை தினமும் கண்ணிற்குள் இட்டு வர கண்ணிற்கு
குளுமை ஒரு பிரச்சனையும் வராது, இப்போது உபயோகப்படுத்தும்
ஐ லைனெர் என்பது கண்ணிற்கு மேலே அழகுக்காக
உபயோகிக்கப் படுகிறது. அழகுடன் ஆரோக்கியமும் வேண்டுமே...
அந்தக் காலத்தில் மாப்பிள்ளைக்கு கல்யாண்த்தின் போது
உபயோகிக்கப் படுகிறது. அழகுடன் ஆரோக்கியமும் வேண்டுமே...
அந்தக் காலத்தில் மாப்பிள்ளைக்கு கல்யாண்த்தின் போது
விளையாடல் சாமான் என்று வைப்பார்கள் அதில் இந்த மைக்கூடும் இடம் பெறும். மீன் வடிவமாக இரண்டு பக்கங்களும் திறக்கும்படி அமைந்திருக்கும் மாப்பிளையும் மை இட்டுக் கொள்வார்.
எதற்கு இந்த மைப் புராணம் என்றுக் கேட்டால் விடாமல் சுத்த மை இட்டுக் கொள்பவர்களுக்கு மெட்ராஸ் ஐ வருவதில்லையாம், ஆனால் சுத்தக் கடுக்காய் மையாக இருக்க வேண்டும்.
எதற்கு இந்த மைப் புராணம் என்றுக் கேட்டால் விடாமல் சுத்த மை இட்டுக் கொள்பவர்களுக்கு மெட்ராஸ் ஐ வருவதில்லையாம், ஆனால் சுத்தக் கடுக்காய் மையாக இருக்க வேண்டும்.
செயற்கை ஐ லைனெர் ஐ வீசிவிட்டு கண்ணிற்கு மை எழுதுவோமா?
மெட்ராஸ் ஐலிருந்து விடுதலை பெறுவோமா?
மெட்ராஸ் ஐலிருந்து விடுதலை பெறுவோமா?
அன்புடன் விசாலம்
No comments:
Post a Comment