Saturday, April 7, 2007

ஆங்கிலேயர்...அனுமார் பக்தர் ஆனார்!



நாம் அனுமாரைப் பூஜிப்பது இயல்புதான் ஆனால் ஒரு ஆங்கிலேயர்,

பெயர்: ஆர்ம்ஸ் பை... என்பவர் அனுமானின் பக்தர் ஆகி கோவில் கட்டப் இடமும் கொடுத்து, பண்மும் கொடுத்திருக்கிறார். நாகப்பட்டினம் ஈரோடு நடுவில் பிராட்கேஜ் பாதை இணைப்பின் வேலை நடந்துக் கொண்டிருந்தது, அப்போது நடுவில் தடங்கலாக ஒரு மிகச் சிறு ஆஞ்சநேயர் கோவில் இருந்தது, அதைப் பெயர்த்து வேறு இடத்திற்கு மாற்ற உத்திரவு இட்டார் அவர். ஆனால் அந்தச் சிலையை எத்தனை முயன்றும் அகற்றமுடியவில்லை, அன்றிரவு ஒரு ரயில்வே தொழிலாளிக்கு ஒரு கனவு வந்தது, அதில் இரண்டு இஞ்சின்கள் தடம் புரண்டு விழுந்த்ன, காலையில் உண்மையாகவே இரண்டு இஞ்சின்கள் தடம் புரண்டன், உடனேயே அந்த ஆங்கிலேயர் அந்த அனுமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார், பிறகு ரூபாய் 800 ம் கொடுத்து அருகிலேயே நல்ல இடமும் கொடுத்தார், அதன் பின் அந்தச் சிலை எளிதாக நகர்ந்துப் பெயர்ந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின் அவர் வாழ்க்கை
மேலும் மேலும் சிறந்து விளங்கியது. அவரும் அனுமான் பகதரானார்.


அன்புடன் விசாலம்

No comments: