Friday, April 13, 2007

பரீட்சை பயம் 1

என்ன அன்பு குழந்தைகளே ரொம்ப ரொம்ப பிஸியா?
காலையிலும், படிப்பு...மலையிலும் படிப்பு..!எங்கு பார்த்தலும் புத்தகங்கள் முகத்திலே ஒரு பீதி சரியா...பரீட்சை நெருங்குகிறது, நான் ஒரு சமயம் என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே உள்ளே நுழைந்தால் அவள் வீட்டுப் பையன் கையில் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு தன் அறையில் மேலும் கீழும் நடந்து ஏதோ ஒப்பித்துக் கொண்டிருந்தான், கொஞ்சம் அருகில் சென்று பார்த்தேன்.எனக்கு துக்கிவரிப் போட்டது. என்ன ஒப்பித்தான் தெரியுமா? ஒரு கணக்கை அவன் படிக்கும் அறையை நோட்டம் இட்டேன். எங்குப் பார்த்தாலும் புத்தகங்கள்,அலங்கோலமாகக் கிடந்தன. அவன் ஜியாமென்ரி பாக்ஸில் ஒரு பென்ஸில் தவிர வேறு ஒன்றுமில்லை. அவனிடம் பேச்சுக் கொடுத்தேன் "ஏன் ரகு! படிப்பு ரிவிஷன் எல்லாம் எப்படி?" அவன் சொன்னான் "ஐயோ மேடம் கேட்காதீர்கள்...படித்தது எல்லாம் மறந்து போய்விடுகிறது. மூளை காலி போல் ஒரு பிளேங்க் ஆகி விடுகிறது. ஒப்பிக்கும் போது நன்கு ஞாபகம் வருகிறது, பின் புத்தகத்தை மூடினால் எல்லாம் மறந்து போய்விடுகிறது". இப்ப்டிச்சொல்லும் போது அவன் பாட்டி அங்கு வந்தார், "என் பேரன் நன்றாகத்தான் படிக்கிறான், ஆனால்... எல்லாம் பயத்தில் எழுதாமல் விட்டு விடுகிறான். பள்ளீயில் அவன் டீச்சரும் கவனிப்பதில்லை" என்றார். தொடர்ந்து அவன் அம்மா வந்தாள்"சும்மா இருங்கோ! செல்லம் கொடுக்காதீர்கள், போன மாதம் வரை அவன் உண்டு அவன் டி.வி உண்டு என்றிருந்தான். அதை விட்டால் கம்ப்யூட்டரில் கேம்ஸ், அதை விட்டால் காமிகஸ் இல்லாவிட்டல் நண்பர்களுடன் ஊர் சுற்றல், படிப்பு எப்படி வரும்?" இந்த ஒரு மாதமாகத்தன் படிக்கஆரம்பித்திருக்கிறான்,8 மாத படிப்பை ஒரு மாதத்தில் படித்து முடிக்க வேண்டும். என்றால் எப்படி முடியும்?" என்றார்.
அன்பு குழந்தைகளே! மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா? உங்கள் தாயும் இது போல் சொல்ல இடம் கொடுக்காதீர்கள். பாடங்களை மனதில் புரிந்து கொண்டு மனதை, ஒருமுகமாக அதில் செலுத்தி, ஆர்வத்துடன் விரும்பி படித்தால் ஒன்றும் மறந்து போகாது. ஆர்வம் interest, கவனிப்பு attention, அதில் முனைந்து விடல் concentration மூன்றும் மிகவும் முக்கியம். இவைகள் இருந்தால் மறதி வராது...மறதி இல்லை என்றால் தன்நம்பிக்கை வளரும்! தன் நம்பிக்கை வளர்ந்தால்...பயம் ஓடிப் போய் விடும். "நான் பரீட்சையில் முதல் இடம் பெறுவேன்" என்றுமனதிற்குள் திடமாக எண்ணத்தைப் பதித்து வைத்தால் அதை முற்சியுடன் செயல் பட்டால் நிச்சியம் முதல் இடம் தான். பரீட்சைக்கு முன் செய்ய வேண்டியவைகள் என்ன? என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்.
பரீட்சைக்கு என் அன்பு கனிந்த ஆசிகள்!


இப்போது ஒரு மகனின் கவலையும்...அவன் தாயின் பதிலும் காண்போம்!

என்ன செய்வேன்? எப்படி எழுதுவேன்?
பரீட்சை வந்து விட்டது
பயமும் என்னைப் பிடித்தது,
படித்ததை மறக்கிறேன்,
திரும்ப திரும்ப படிக்கிறேன்,
எதைப் படிக்க எதை விட,
ஒரே குழப்பம் மனதில் ஓட,
மேசை முழுதும் புத்தகங்கள்,
கலங்கிப் போகும் எண்ணங்கள்,
சாப்பாடும் கொள்ளவில்லை,
உறக்கமும் பிடிக்கவில்லை,
கணக்கின் எண்கள் மூளையில் சுற்ற,
கெமிஸ்ட்ரி...என்னைப் பாடாய்ப் படுத்த,
பயாலஜியின் பயம் என்னைக் கவ்வ,
பௌதிகமும் பூதமாக என்முன் நிற்க,
என்ன செய்வேன்? எப்படிச் சொல்வேன்? அம்மா!
அம்மாவின் பதில்...
கண்ணா ஏன் இந்த வாட்டம்,
ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்,
அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும்
மனதைப் பொருத்தி கவனம் வேண்டும்,
நாளை பார்க்கலாம் என்று தள்ளாதே,
சமய விரயமும் செய்யாதே,
நாளை செய்வதை இன்றே முடி,
இன்று செய்வதை இப்போதே முடி,
தன்நம்பிக்கை படகில் ஏறி விடு,
பரீட்சை நதியைக் கடந்துவிடு,

அன்புடன் அம்மம்மா விசாலம்

No comments: