Saturday, April 14, 2007

காவடிகள்


தைப் பூசம் என்றாலே வித விதமான காவடிகளையும் பலவிதமான உடம்பைச் சிலிர்க்க வைக்கும் பிரார்த்தனைகளையும் பார்க்கிறோம், நானும் ஒரு தடவை தில்லியில் உத்தர் ஸ்வாமி மலையில் காவடி எடுத்துள்ளேன். மேலே மலை ஏறுவதே தெரியாமல் என் தோளில் இருக்கும் பாரமும் தெரியாமல் எப்படி மேலே நடந்தேனோ எனக்கே தெரியவில்லை. இதைதான் மனச் சக்தி என்கிறார்கள் போலும். எப்படி வேண்டியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என்று மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் எடுக்கும் காவடியில் சிரமம் தெரிவதில்லை.

சிலர் 108 வேல் உடம்பில் குத்திக் கொண்டு தேரில் ஒரு நூலில் குப்புறத் தொங்கிப் போவதையும் பார்த்து இருக்கிறேன் சிலர் கன்னத்தில் பெரிய அலகைக் குத்திக்கொண்டு இன்னொரு கன்னம் வழியாகத் துளை போட்டுக் கொண்டு வருவார்கள். ஒரு இரத்தமோ வடுவோ இருப்பதில்லை. நம் நாட்டிலும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா, பினாங் போன்ற இடத்திலும் இவைகள் நடக்கின்றன. ஒரு ஜப்பானியன் காவடி எடுப்பதைப் பார்த்திருகிறேன். காவடி எடுத்தவரிடம் இதைப் பற்றி கேட்டவுடன் அவர் இதை விஞ்ஞானப் பூர்வமாக விளக்குகிறார்.
நம் உடம்பில் எண்டோர்பின்ஸ் என்ற திரவகம் இந்த மாதிரி நேரத்தில் அதிகமாகி அது ஒரு வலி நிவாரணியாகச் செயல் படுகிறது என்கிறார். அது உண்மையா என்று விஞ்ஞானிகள் சொல்ல வேண்டும்.
இந்தக் காவடியின் தத்துவம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் என் மனதில் பட்டவைகள்இடும்பன் தூக்கிய இரு மலைகள், துக்கம் சுகம் என்ற இரண்டையும் சமமாகப் பாவித்து தோள் கொடுப்பது
இருமலை சிவ கிரி, சக்தி கிரி... சிவனும் சக்தியும் சமாமாக சமபாகமாக நம் உடம்பில் சேர பேரானந்தம்! மலை போல் அசைய முடியாத நம்பிக்கை வேண்டும். மலைப் போல் துன்பம் வரினும் அந்தத் துன்பத்திற்கு நாமே பொறுப்பேற்று அதை நிவிருத்தி செய்ய முயல வேண்டும்.

குருகொடுத்த வேலையை எத்தனை பளுவான தானாலும் நிறைவேற்ற வேண்டும். இங்கு இடும்பன் அகஸ்தியர் வேண்டுகோளின் படி இரு மலைகளையும் தன் தோளில் தராசு போல் தூக்கிச் சென்றான்.
தைப்பூசம்! முருகனுக்குச் சிறந்தநாள். வள்ளியுடன் காட்சி அளிக்கும்
நாள்.


முருகனுக்கு அரோஹரா! கந்தனுக்கு அரோஹரா!


அன்புடன்விசாலம்

No comments: