Sunday, April 8, 2007

மனிதன் எங்கே போகிறான்?

மிருகங்களுக்குப் பகுத்தறிவு இல்லை...
ஆனால் நெறி அவைகள் தவறுவதில்லை,
புலி பசித்தாலும் புல் தின்னுவதில்லை,
பசுவோ பால் கொடுக்கத் தவறுவதில்லை,
மேலிருந்து கீழ் பாயும் நதியும்...
தன் திசையை மாற்றுவதில்லை,
உரிய காலத்தில் பழங்களும்...
பழுக்கத் தவறியதில்லை,
மல்லிகையோ தன் மணம் வீச...
ஒருக்காலும் தவறியதில்லை,
இயற்கை தன் கடமையிலிருந்து...
ஒரு பொழுதும் மாறுவதில்லை,
ஆனால்...
ஆறறிவு படைத்தவன் மாறிவிட்டானே!
எதையோ தின்கிறான்,
எப்படியோ வாழ்கிறான்,
கட்டுப்பாடுகளை உடைக்கிறான்,
தன் இஷ்டப்படி ஆடுகிறான்,
மரங்களை வெட்டுகிறான்,
மிருக இனத்திற்கு போகிறான்,
உயர் எண்ணங்களை இழக்கிறான்,
தாழ்ந்த மட்டத்தை அடைகிறான்,
பணத்திற்காக ஓடுகிறான்,
இறை சக்தி தேட மறுக்கிறான்,
சத்தியத்தை நழுவ விடுகிறான்,
அனபிற்கு விலையும் கேட்கிறான்,
தெயவம் போன்ற பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில் போடுகிறான்,
எங்கே போகிறான் மனிதன்?
என்று திருந்துவான் மனிதன்?


அன்புடன் விசாலம் ,

No comments: