பிறப்பு என்றால் இறப்பு என்பதும் கூடவே நிற்கும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஒரு மனித நேயத்துடன் அந்த சூழ்நிலையில் நடந்து கொள்ளலாமே ,.இந்த எண்ணம் வந்தது ஒரு ஹோட்டலில். ஆம்,இரண்டு வாரங்கள் முன் நான் என் சிநேகிதியுடன் மாலை
ஒரொ ஹோட்டலுக்கு சென்றிருந்தேன் நாங்கள் அமர்ந்தவுடன்
ஒரு மனிதர் {நடை உடையைப்பார்த்தால்
ஒரு பிரமுகர் போல் தோன்றியது} எங்கள் முன் வந்து அமர்ந்தார். அவருடன் அவரின் நண்பரும் இருந்தார்.
பொங்கல் வடை பின் குலோப்ஜாமூன் ஆர்டர் செய்தார். இதில்
என்ன வியப்பு எல்லோரும் இதைத்தானே செய்வார்கள், என்று
எண்ணுகிறீர்களா? கேளுங்கள் மேலே சொல்கிறேன், அவருக்கு மொபைலில் ஒரு கால் வந்தது.
இவர் பதிலுக்கு சத்தமாகப் பேசினார் "என்ன? பாடி(body)இன்னும் எடுக்கவில்லையா?"
நல்ல வேளை, நான் கழண்டு வந்துவிட்டேன். ஒரு தடவை மாட்டிக் கொண்டால்9 மணி ஆகிவிடும்," அவர் நண்பர் சொன்னார்,
"என்னப்பா...என்ன சொல்றான் பாபு?
ஆபீசிலேயே உயிர் போயிடுத்தா? அப்ப நீ சீனியர் மோஸ்ட் ஆச்சே இருக்க வேண்டாமோ? இப்படி தின்ன ஓடி வந்துட்டாயே", சிரிக்கிறார் நண்பர்"அட போப்பா!போலீஸ் வந்து ஆயிரம் கேள்வி கேட்டு கொஞ்சம் கையில் கொடுத்தேன், நகர்ந்து விட்டான். என்னிடத்தில் தான் இநதப் பையன் மணி வேலை செய்தான். சொல்லிக்கொண்டே குலோப்ஜாமூனை சுவைக்கிறார்.இவைகள் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆர்டர் செய்த காபி கூட உள்ளே இறங்க மறுத்தது.
எங்கே மனித நேயம் ஒளிந்து கொண்டது? தன் உயிரைக் கொடுத்து மேலே வள்ர்த்து sincere ஆக வேலை செய்த அந்த நல்ல மனிதன் செத்த அன்றே அப்போதே அவனுடய boss குலோப்ஜாமூன் தின்கிறாரே என்ன
என்று சொல்ல மனம் வருந்தினேன்.
அன்புடன் விசாலம்
Wednesday, April 4, 2007
மனித நேயம்
Posted by Meerambikai at 9:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment