Friday, April 6, 2007

காந்திஜியே கீழே இறங்கி வாரீர்!


காந்திஜியே கீழே சற்று இறங்கி வாரீர்
நாட்டின் நிலைமையைச் சற்று பாரீர்,
சத்திய சோதனையில் வெற்றி அடைந்த நீங்கள்,
இன்று சத்தியம் எங்கே என்று தேட வாரீர்
எளிமையையே கடை பிடித்த நீங்கள்,
இங்கு பணத்தின் திமிரை அடக்க வாரீர்,
அஹிம்சை கொண்டே ஜெயித்த நீங்கள்,
ஹிமசைக்கு ஒரு வேலி போட வாரீர்,
அன்பே தெய்வம் என்றுரைத்த நீங்கள்,
இங்கு அன்பைத் தேடிக் கொடுக்க வாரீர்,
தீவிரக் கொள்கையில் திளைத்த நீங்கள்,
தீவிரவாதத்தை முறியடிக்க வாரீர்
தொழிற்கல்வி கொடுத்து சிறப்பித்த நீங்கள்
ஒப்பித்தெழுதும் படிப்பைக் களைய வாரீர்,
கதரையே அணிந்து மகிழ்ந்த நீங்கள்
அந்த கதர் துணியைக் காட்ட வாரீர்,
இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த நீங்கள்
இன்று இயற்கை அழிபடுவதைக் காணவாரீர்
லஞ்சம் என்ற பெயரையே வெறுத்த நீங்கள்
மலிந்து கிடக்கும் லஞ்சத்தை ஒழிக்க வாரீர்
குண்டுபட்டும் ராம் ராம் என்று கீழே சாய்ந்த நீங்கள்
அந்த ராமரை உணர வைக்க வாரீர்
காந்தியே சற்று இறங்கி வாரீர்
நாடு போகும் போக்கைப் பாரீர்
காந்தி ஜெயந்தியின் நன்நாளில்

அவர் கொள்கைகளை கடைப் பிடிப்போமாக!


விசாலம்

No comments: