நான் முன்பு எழுதிய காளி கோவிலில் நடந்த சம்பவம் இது என் பள்ளி
மந்திர் மார்கில் காளி கோவில் அருகில் இருந்ததால்
அடிக்கடி போகும் பாக்கியம் கிடைத்தது. ஒரு சமயம் என் மகனின் நண்பன் பிலானியிலிருந்து வந்திருந்தான்.
அவன் காளி பக்தன் ஆகையால் அந்தக் கோவிலுக்குப் போக ஆசைப்பட்டான்.
நான், என் மகன் நண்பனுடன் அந்தக் கோவில் சென்றோம்.
அங்கு அம்பாளின் உருவசிலையைப் புகைபடம் எடுக்க தடை இருந்தது. என் மகன் சிறந்த போட்டோகிராபர். அதனால் அவன் கை குறுகுறு என்று அலைந்தது. அம்பாளின் சிலையை எடுக்க கேமராவை எடுத்தான், நான் அவனைத் தடுத்தேன். அவன் "என்ன ஆகிவிடும் நல்ல powerful camara she should come in that" என்று சவால் விடுத்தான். நான் "கடவுளிடம் no challenge" என்றேன். ஆனாலும் அவன் கேட்கவில்லை புகைப் படம் எடுத்தவுடன்அவன் கேமராவின் லென்ஸின் கவர் கீழே விழுந்து விட்டது. உடனேயே கீழே பார்த்தோம். பல இடங்களில் தேடினோம்.
அது காணவில்லை ஒருவருக்கும்
கிடைக்காமல் மாயமாக போய்விட்டது . பின்அந்தக் காளி புகைப் படத்தை
ஆர்வத்துடன் பார்த்தோம். எல்லாதோட்டக் காட்சிகள்,
மற்ற படங்கள், கோபுரங்கள் அழகுடன் பளிக்க இந்தக் காளி, சின்னமஸ்தாவின் படம் ஒன்றுமே விழாமல் கறுப்பாக
மறைக்கப்பட்டிருந்தது என் மகன் அம்பாளின் சக்தியை உணர்ந்தான்.
விசாலம்
Friday, April 6, 2007
ஒரு வியப்பூட்டும் சம்பவம்!
Posted by Meerambikai at 2:17 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment