Sunday, April 8, 2007

பகுள பஞ்சமி


இந்த பகுள பஞ்சமி அன்றுதான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் சித்தி அடைந்தார் அவர் வேதம் சாஸ்திரம் இதிஹாசங்கள் முதலியவைகளைப் படித்துப் பூரணப் பாண்டித்யம் பெற்றார். அவரைப் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் படிக்காமல் தள்ளிவிட்டால் என்ன செய்வது என்பதால் ஒரு சிலவற்றை மட்டும் நினைவு கொண்டு எழுதுகிறேன். அவர் தன் கடைசிக் காலம் நெருங்குவதைத் தெரிந்துக கொண்டு ஐந்து நாட்களுக்குமுன் ஆபத் சன்யாசம் எடுத்துக் கொண்டார். புஷ்ய பஞ்சமி அதிகாலை
தியாகப்பிரும்மம் தன் ஸ்நானம் முடித்துக்கொண்டு வந்து அமர்ந்தார். கிட்டத்தட்ட சுமார் 95 கோடிராம நாமம் ஜபித்தவர். ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியை ஆராதனை செய்யத் தொடங்கினார். பக்தர்களும் சிஷ்யர்களும் வந்து அமர்ந்து கொண்டனர். எல்லோரையும்இடைவிடாது தாரக ராம மந்திரத்தைச் சொல்லச்சொன்னார். அந்த இடம் முழுவதும்
ராம் ராம் ராம் என்ற அழகான ஒலி பரவி எல்லோரும் உள்ளிருக்கும் ஒளியைப் பார்த்தனர். அப்போது மனோஹரி ராகத்தில் " பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ" என்னும் கீர்த்தனைப் பாட கையில் சின்முத்திரை தரித்து நேரே ராம தரிசனம் கண்டு, கபாலச்சின்னமாய் சித்தி அடைந்தார்கள். திருவையாறில் பஞ்ச ரத்னக் கீர்த்தனைகள், தியாகராஜ ஆராதனையின் போது கேட்டிருப்பீர்கள், முதல் ஆராதனை 1907ல் ஆரம்பித்தது. பின் 1925ல் 7ம்தேதி திருமதி.நாகரத்ன அம்மாள் சமாதியைக் கட்டிபிருந்தாவனம் அமைத்து கும்பாபிஷேகம்
நடத்தினர்கள். அதிலிருந்து விடாமல் இந்த ஆராதனை நடக்கிறது சங்கீத பக்தர்கள் அந்த மஹானை கண்டிப்பாக நினவு கூர்வார்கள் என்பது திண்ணம்.

அன்புடன் விசாலம்

No comments: