Saturday, April 7, 2007

வாரணமாயிரம்

மாதத்திலே மார்கழி ஒரு சிறந்த மாதம்! கீதையிலே கண்ணனும் இதையே சொல்கிறார்.
ஆன்மீகச் சூழல் நிறைந்தமாதம்! இந்த மாதத்தில் தான் விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசியும்
சிவனுக்கு திருவாதிரையும் கண்ணனுக்கு...ஆண்டாளின் திருப்பாவையும், கிருஸ்தவர்களுக்கு
xmas பண்டிகையும், ஹனுமத் ஜயந்தியும் வருகின்றன.பெரியாழ்வார் கண்டெடுத்த பூதேவியின் மறு அவதாரமான கோதையாக இருந்து பின் ஸ்ரீரங்கநாதனே அவளை ஆட்கொள்ள கனவில் பெரியாழ்வாருக்கு செய்தி அனுப்ப ஸ்ரீஆண்டாள் என்ற பெயர் பெற்றாள்.
அவள் இயற்றிய திருப்பாவை, திருவெம்பாவை மிகச் சிறப்பு வாய்ந்தவை.
"மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்நாளாள்" என்று முதல் பாட்டு ஆரம்பம். இது போல் முப்பது பாட்டுக்கள்
பாடியிருக்கிறார், கடைசிப் பாட்டு சுருட்டி ராகத்தில்"வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை" என்று ஆரம்பிக்கிறது. அவர் நாச்சியார் திரு மொழி என்றும் இயற்றிருக்கிறார்.அதில்
ஆறாவது பாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது."வாரணமாயிரம்" என்று ஆண்டாள் தான் கனவு
கண்டதை விவரிக்கிறாள். அந்தக் காலத்தில் திருமண நிகழ்ச்சியின் போது "பச்சைப் பூசுதல்"
என்னும் நிகழ்ச்சியில் இந்த பாடல்களைப் பாடுவார்கள். திருமணம் இனிதே நடந்து வாழ்க்கை
இன்பம் பெறும். கல்யாணமாகாத பெண்மணிகள் இதைப் பாட விரைவில் திருமணம் நிச்சியம் செய்யப் படும் என்கிறார்கள்.
அது என்ன அப்படி திரு ஆண்டாள் கண்ட கனவு?
நாரணன்...நம்பி நடக்கின்றான் என் எதிரில்...பூரணப் பொற்குடம் வைத்து தோரணம்
நாட்டி வதுவை மணமென்று நாளிட்டு...அழகானப் பந்தல் கீழ் மாதவன் வந்ததைக் கண்டேன். இந்திரன் தேவர்களுடன் வந்து என்னை மகள் பேசி மந்தரிக்கோல் உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்! நாலு திசைகளிலிருந்து தீர்த்தங்கள் வர... சதிரிள மங்கையர்தாம் வந்து எதிர் கொள்ள...மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத... முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்... இம்மைக்கும்,ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாழ் பற்றி அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான்! குங்குமம் அப்பக் குளிர் சாந்தம் மட்டிதது மங்கள வீதி வலம்செய்து மண நீர்...அங்கவனோடும் உடன் சென்றங் காளைமேல் மஞசனமாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
இந்த வாரணமாயிரம் பாடலை டாகடர்.சௌ.பத்மா சுப்பிரமண்யம் ஆட ஆணடாளே வந்து பாடுவது போல் தோன்றும்! எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது!
காலை 5 மணிக்கு எழுந்து ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பாவைப் பாடுவோம்!

அன்புடன் விசாலம்

No comments: