பல விஞ்ஞானிகள் மிகவும் உழைத்து, பாடுபட்டு , பல பரிசோதனைகள் செய்து அதில் தோல்விக் கண்டாலும்... வெற்றி அடையும்வரை மனம் தளராது இடைஞ்சல்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து புதிதாக ஒன்றைக் கண்டு பிடிக்கிறார்கள். அது கண்டு பிடித்தவுடன் நிச்சயம்
சில எதிர்ப்புக்களை அவர்கள் சமாளித்து, பரிசோதனையுடன் அதை நிரூபித்துக் காட்டி, வெற்றி அடைகிறார்கள். இதில் அடிபட்டு வந்தவர் தான் பெரிய விஞ்ஞானி...மேதை ஸர் ஜகதீஷ் சந்தர பஸு
பல ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் தாவரங்களுக்கு உயிர் இல்லை என்றுதான் நினைத்தனர். ஆனால் இந்த விஞ்ஞானி தாவரங்களுக்கும்
வெப்பம், சூடு என்ற உணர்வுகள் உண்டு! என்றும் அவை விஷத்தில் மடிந்து போகின்றன..என்றும் கூறினார். அவைகளுக்கும் மனம் உடல் நரம்புகள் எல்லாம் இருக்கின்றன என்றார்.
எப்போதும் போல் பலர் இதற்குஎதிர்ப்பு தெரிவித்தனர். விஷம் செடிக்குப் போட்டால் பட்டுப் போய் விடும் என்பதை நிரூபித்துக் காட்டு... என்றும் வாதாடினர், அவரும் அதற்கு ஒத்துக் கொண்டு ஒருவரிடம் விஷம் வாங்கி வரும்படி அனுப்பினார். இதற்கு என்று ஒரு நாள்
குறிப்பிடப்பட்டு... சபையும் கூடியது. எல்லோரும் அமைதியாய் அமர சர் ஜகதீஷ் வந்தார்.. அவருடன் மண்செட்டிகளும் செடிகளும் கூடவே வந்தன. அவர் விஷம் புட்டியிலிருந்து ஒரு செடிக்கு ஊற்றினார்.கொஞ்சம் நேரம் கழிந்ததும்
செடிகள் மலர்ந்த முகத்துடன் சிரித்தன. உடனே சபையில் எலோரும் "கொல்" என்று சிரித்தனர். இவர் அதற்கு பயப்படவில்லை.மனதளவில் ஏன் இப்படி நடந்திருக்கும்? என்ன நடந்திருக்கும்? என்று சிந்தித்தார்.
மனம் தளரவில்லை. கவலைப்படவில்லை. ஒரு முடிவுக்கு வந்தார்.. தான் அந்த விஷத்தைக் குடித்தார்.எல்லோரும் செய்வதறியாது விக்கித்து
நின்றனர்.ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை! அதில் விஷமில்லாதது நிரூபணம ஆயிற்று பின் தானே விஷம் வாங்கி அதில் போட்டார் அந்தச் செடி இரண்டு நாளில் கருகி விட்டது பின் எல்லோரும் அவரதுஇந்தக் கண்டுபிடிப்பை புகழ்ந்து பாராட்டினர். செடிகள் இரவில் ஓய்வு பெறுமாம்... அதனால் இரவில் ஒன்றும் பறிக்கக் கூடாது என்கின்றனர்.
இப்போது நானும் இதைப் பரிசோதிக்கலாம் என்று எண்ணி ஒரு நல்ல செடியை நட்டு அதற்கு எதிர்மறை அலைகளை தினமும் செலுத்தினேன். அது வளராமல் பூக்காமல் அப்படியே நின்றது. பின் வீட்டின் பூஜை செய்த
மருவு என்ற வாசனைச் செடியை பூஜை முடிந்து இரண்டு நாட்கள்
கழித்து வாடி இருந்ததை நட்டேன். பின் அதனுடன் அன்பாகப் பேசினேன். ஆல்பா மைண்ட் பவரில் அது நன்றாக வளர்ந்து விட்டது போல்
மனதில் படம் வரைந்தேன். மனதில் பதித்தேன் பின் நல்ல இசையின் ஒலி நாடாவும்வைத்தேன். பிரபஞ்சத்திலிருந்து சில சக்திகளயும் அதற்கு cosmic energy } செலுத்தினேன். ஒரு வாரம் ஒன்றும் பலனில்லை ,ஆனால் தொடர்ந்து மேலும் ஒரு வாரம் செய்தேன், ஆஹா! அந்த நாள்... அழகாக கொழுந்துடன் மேலே கிளம்பி நின்றது என் மருவு செடி.
அன்புடன்விசாலம்
Friday, April 13, 2007
இசையில் வளர்ந்த செடி!
Posted by Meerambikai at 9:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment