உலக ரெய்கி நாள்!
நாளை எல்லோரும் முடிந்த அளவில் உலக க்ஷேமத்திற்காக
'global peace' தியானம் செய்யலாமே! 'touch therapy'அம்மாவின் மடியில் குழந்தை அழ, தாய் அதை அரவணைத்து மார்பிலோ அல்லது முதுகிலோ மெல்லியதாகத் தட்டிக் கைவைக்க அது நிம்மதியாகத் தூங்க ஆரம்பிக்கிறது. இதேபோல் நண்பனுக்கு நண்பன் தோளில் கைவைத்துத் தடவிக் கொடுக்க நண்பன் கவலையை மறக்கிறான். காதலி எதோ வருத்தத்தில் அழ காதலன் ஆதரவுடன் அவளை அணைக்க முதுகில் கை வைக்க அவள் மனம் இலேசாகிறது. ஆஸ்பத்திரியில் நோயாளியைப் பார்க்க, ஆதரவுடன் பாசத்துடன் அவர் கையைப் பிடிக்க அவருக்கு நோயின் வலி குறைகிறது. இந்தத் தத்துவத்தில் தான் ரெய்கி செயல்படுகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியை நம் கையில் வரவழைத்து உடலில் உள்ள பிராண சக்தியை அதிகரித்து ஒவ்வொரு சக்ராவில் இருக்கும் எதிர்மறை அடைப்பு negative blocks ஐ நீக்கி நற்றலைகளால் positive vibration உடலுக்குள் நல்ல இரத்த ஒட்டம், சீரான காற்றோட்டம்
சீரான உயிரோட்டம், ஜீவகாந்த ஓட்டம் உண்டாக்கி உடலில் வரும் பிரச்சனைகளை சரிப்படுத்த ரெய்கி ஒரு அருமருந்து. பக்க விளைவு இல்லை, உலகத்தில் எந்தக் கோடியில் இருந்தாலும் இந்த சக்தியை அனுப்ப முடியும். ஆனால்அதைப் பெறுபவர் நம்பிக்கையோடு பெறவேண்டும். பின் இதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன்.
அன்புடன் விசாலம்...
Sunday, April 8, 2007
உலக ரெய்கி நாள்!
Posted by Meerambikai at 4:44 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment