Friday, April 6, 2007

மஹாவீர் ஜயந்தி!



ஜைன மதத்தினருக்கு மாஹாவீர் ஜயந்தி ஒரு பெரிய திருவிழாதான்!அவரைப் பற்றி,
பார்க்கும் முன்னர் நாம் அவரின் பிரார்த்தனையில் நாமும் கலந்து கொள்ளலாம் எல்லா மதமும் சம்மதமே! அன்பு, ஒழுக்கம், நற்சிந்தனை, கடமை, உழைப்பு இதிலேயே நாம் அந்த இறைச்சக்தியைப் பெறலாம் இல்லையா?


"நமோ ஹரி ஹந்தாணம்
நமோ ஹரி சித்தாணம்
நமோ ஹரி ஆர்யாணம்
நமோ ஹரி உவஜ்யாணம்
நமோலோ ஸர்வ ஸாஹீமாணம்
பஞ்ச நமக்காரோ சர்வ பாவ பாணாஸனா
பத்மம் ஹாவை மங்களம்"


இதன் அர்த்தம் அந்த இறைச்சக்தியை வணங்குகிறேன்,
முக்தி நிலையை எய்தியவர்களை வணங்குகிறேன்,
பெரிய மதத் தலவர்களை வணங்குகிறேன் ,
நல்லாசிரியர்களை வணங்குகிறேன்,
நல்ல மேலோர்களை வணங்குகிறேன். இந்த பஞ்ச நம்ஸ்காரங்களைச் செய்தால், வாழ்க்கையில் மங்களம் உண்டாகும், மகிழ்ச்சி பெருகும்.
ஸ்ரீ மஹாவீரரின் தந்தை திரு.சித்தார்த்த் என்பவர் அரசர், அவர் தாய் திரிசலா அல்லது பிரியகர்னி, இந்தத் தாய் மஹாவீரரைப் பெற்று எடுக்கும் முன் 14 பொருட்களைத்
தன் கனவில் கண்டாள். அவை...சிங்கம், யானை, வெள்ளிதட்டு, தாமரைக்குளம், காளை, லட்சம் பாற்குடம், காற்றில் தெய்வீகச்சக்தி, இரண்டு மலர்மாலைகள், சந்திரன், சூரியன், புகையாத அக்னி, கொடி, அபிஷேகப்பால், அரிசி.
இதைப் பற்றி பல பெரியவர்களிடம் கேடக அவர்கள் சக்கரவர்த்திப் போல், ஒரு ஒளி பொருந்திய மகன் பிறப்பான் என்றனர்.
மகனும் பிறந்தான் ஆனால் ஸ்ரீ புத்தரைப் போல் அரசக்குடும்பத்தில் பிறந்திருந்தும் தனது முப்பதாவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி ஆசைகளை அடக்குவதில் வெற்றியும் கண்டார்,

பல இடங்கள் காலில் செருப்பு இல்லாமலே நடந்து பின்
அந்த இறை சக்தியைக் கண்டுக் கொண்டார். உண்மைப் பேசுதல், திருடாமல் இருத்தல், பால் உணர்ச்சியைக் கட்டுப் படுத்தல் எனபதை மிக முக்கியமான கொள்கையாக வலியுறுத்தினார். முற்பிறவியின் கர்மவினையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
கோபம் பேராசை இன்னாசொல், கெட்ட எண்ணங்கள் முத்லியவை பாபங்களை மேலும் பெருக்க உதவுகின்றன என்றும் உபதேசித்தார்.
இந்த ஜைன மதம் ஜினா என்பவர்களின் மூலம் ஆரம்பமாகியது இவர்களே பின்னால் ஜைன் என்று அழைக்கப்பட்டனர். "ஸ்வேவாதமபரா","தீர்த்தங்கரா" என்று இதில் இரண்டு பிரிவுகள்,

ஸ்ரீ மஹாவீரரின் குரு ஸ்ரீ பார்ஸ்வநாத் என்பவர் தீத்தங்கராவைச் சேர்ந்தவர்.
இவர்கள் உள்ளே நிலைத்திருக்கும் 'நான்' என்பதை ஒழித்து கோபம், பேராசை, அஞ்ஞானம், அஹங்காரம் இவற்றை ஒழிக்க உபதேசம் செய்பவர்கள்.
மிகவும் பழைய ஜைன் கோவில்கள் குஜராத்தில்
கிரினா பலிதானாவிலும், ராஜஸ்தானில் மஹாவீர்பி என்ற இடத்திலும் காணலாம்.

இந்த 'மஹாவீர் ஜயந்தி' அன்று தேர் இழுக்க, அதில் இந்த மஹாவீரர் எழுந்தருளி வலம் வருவார். அன்னதானம், கல்விதானம் போன்ற பலவிதமான சிறப்பு தானங்கள் நடக்க, பெரிய திருவிழாக் கோலம் காணக் கண்கோடி வேண்டும்! அந்த மஹா புருஷருக்கு, தலை குனிந்து வணங்குகிறேன்!


அன்புடன் விசாலம்

No comments: