நாம் தியானத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருகிறோம். பலவிதமாக இருந்தாலும் குறிக்கோள் ஒன்றுதான், என் தந்தையுடன் ஒருதடவை நான் தியானத்தைப் பற்றி பேச அவர் வெட்ட வெளி தியானம் பற்றி கூறினார், பலவிஷயங்கள் இருந்தாலும் மிக சுருக்கமாகச்சொல்கிறேன். பல சித்தர்கள் இன்றும் வெட்ட வெளியில் காலில் ஒன்றுமில்லாமல்
நடக்கின்றனர். இதைப் போல் திருவண்ணாமலையிலேயே பல சித்தர்கள் உலவி வருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் பாறாங்கல் மேலேயே படுத்தும் கொள்கின்றனர்.
நடக்கின்றனர். இதைப் போல் திருவண்ணாமலையிலேயே பல சித்தர்கள் உலவி வருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் பாறாங்கல் மேலேயே படுத்தும் கொள்கின்றனர்.
இயற்கைச் சூழ்நிலையிலேயே முழுப் பொழுதும் கழிக்கின்றனர். இயற்கை உணவே உட்கொள்ளுகின்றனர். பகவான் ஸ்ரீ தத்ராத்த்ரேயரின் குருவே இயற்கைதான். அந்தக் காலத்தில் மரங்கள், மண்,அக்னி, மலை என்று எல்லாவற்றுக்கும் பூசை செய்தார்கள். நம் கிரமங்களில் கூட வெளித் திண்ணியில் கட்டை மணை என்ற கட்டையால் ஆன உருளையாக ஒரு தலைகாணி வைத்துக்கொண்டு ஒரு வேஷ்டியை விரித்து திண்ணையில் படுப்பார்கள் நன்கு குறட்டையுடன் தூங்குவார்கள் நமக்கு நல்ல மெத்தையிலும் ஏசி இருந்தும் தூக்கம் வருவதில்லை. இயற்கையில் ஒரு பெரிய ரகசியமே பொதிந்து கிடக்கிறது. நல்ல ஏரியில் குளித்து காலையில் இயறகையுடன் ஒன்றி ஒரு நடை நடக்க நம் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி வருகிறது. இயற்கையின் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள தேக சாதனை மனோதிடம் நம்பிக்கை அவசியம், மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிகளும் இயற்கையிலேயே வளருகின்றன வாழ்கின்றன, நாய் தன் வயிறு சரியில்லை என்றால் புல்லைத் தின்பதைப் பார்த்திருக்கிறேன்.
தன் சூட்டை நீக்க புல் தரையில் உருளும், மனிதனுக்கு வரும் வியாதிகள் அவ்வளவாக மிருகங்களுக்கு வருவதில்லை,பச்சைப் புல்லில் நடக்க நம் பாதங்களில் இருக்கும் புள்ளிகள்
தன் சூட்டை நீக்க புல் தரையில் உருளும், மனிதனுக்கு வரும் வியாதிகள் அவ்வளவாக மிருகங்களுக்கு வருவதில்லை,பச்சைப் புல்லில் நடக்க நம் பாதங்களில் இருக்கும் புள்ளிகள்
{meridians } அழுந்த நல்ல toningஎன்று சொல்லப்படும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. காலை சூரிய வெளிச்சம் விட்டமின் டி கொடுக்கிறது நதிகளுக்குள் அமுந்தி உட்க்கார water therepy என்று சொல்லப்படும் தண்ணீரால் முதுகு எலும்பு சீராகி வலி வருவதில்லை. நீச்சல் ஒரு மிக சிறந்த தேகப் பயிற்சி... ஆகையால்...
இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்
இயற்கையில் தியானம் செய்வோம்!
அன்புடன் விசாலம்
No comments:
Post a Comment