தந்தை தினம் வருகிறது... பல பேர்களுக்கு அது வந்து போவதே தெரிவதில்லை! தாய் தினம் வருகிறது... கொஞ்சம் தொலைக்காட்சி மூலமாய் தெரிந்தாலும் "அம்மாவென்றழைகாத உயிரில்லையே" என்பது போல் ஓரிரண்டு பாட்டுக்களுடன் முடிவடைகின்றன. ஆனால் இந்தக் காதலர் தினம் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத்
தொடங்கி, ஒரு கலக்கல்கலக்கி விடுகிறது அது ஏன்? நம் நாடு பெற்றோர்களைத் தெய்வமாகமதிக்கும் நாடு தாய் தந்தையைப்
பராமரித்து கடைசிவரை அவர்களை பாசத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்களின் கடமை! ஆகையால் தனியாக தாய், தந்தை தினம் தேவையே இல்லை. நம் மனத்தில் தினமும் அவர்கள் குடியிருக்கிறார்கள். மேல் நாட்டினிலே மகன், மகள் 16 வயது வந்தால் தனியாக குடி போகிறார்கள், அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலை இடுவதை அவர்கள் விரும்புவதில்லை...ஆகையால் இந்தத் தந்தை தினம், தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள். இப்போது காதலர் தினம் நம் முன்னால் வருகிறது நம் நாட்டு கலாசாரம், காதலைப் புனிதமாக மதிக்கிறது. இலை மறைவு தலை மறைவு என்பார்கள், நான் பாரீஸில் போன போது... அங்கு தினமும் காதலர் தினமாகத்தான் இருந்தது. எவ்வளவு விரசமானக் காட்சிகள்! நான் தான் என் திசையைத் திருப்பிக் கொண்டேன். ஒரு பத்து வருடங்களாகத்தான் இது மிகப் பிரபலமடைந்து வருகிறது. இதன் காரணமாக உண்மைக் காதல் செழிக்கிறதோ என்னமோ ஆனால் வியாபாரம் செழிக்கிறது. காதலர் தினத்தை நான் வரவேற்கிறேன், ஆனால் அந்த அன்பை நல்ல ஆரோக்கிய நிலையில் உபயோகித்தால் அதைவிடச் சிறந்தது வேறில்லை! இந்தத் தினம் அன்பை வெளிப்படுத்த...ஆனால் அதை ரசாபாசமாக உபயோகிப்பதற்கு அல்ல, இந்தக் காதலின் அர்த்தம் நம் நாட்டில் தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்களோ என்ற ஐயம் மனதிலே உண்டாகிறது, இந்தப் புனிதக் காதல் பிறந்தகதையைப் பார்த்தால் ஓரளவு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள முடியும்.
மூன்றாம் நூற்றாண்டில் கிளாடியஸ் என்றகொடுமை அரசன் தன் சேனையில் நிறைய பேர்கள் சேர ஒரு சட்டம் கொண்டு வந்தான் அதாவது கலயாணம் ஆகாதவர்கள் தான் சேனையில் சேர முடியும். அவரிடம் இருந்த Velaintine என்பவருக்கு இந்தச் சட்டம் பிடிக்கவில்லை, அவர் அரசனுக்குத் தெரியாமல் பல காதலர்களின் திருமணம் நடத்திவைத்தார், இது அரசனுக்குத் தெரிந்து, பின் அந்த நல்லவர் பிடிப்பட்டு மரணதண்டனையும் பெற்றார், எல்லோரும் கருணையுடனும் பாசத்துடனும் அவரை வந்து பார்த்தார்கள்.
ஜெயிலின் அதிகாரியின் சிறு மகள் அவர் மேல் மிகவும் அன்பு காட்டினாள். பிப்ரவரி 14ந்தேதி அவ்ருடைய கடைசி நாள் அன்று அந்தச் சிறு பெண்ணிற்கு ஒரு சின்னக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு மரணமடைந்தார். அதில் " என் அன்பு..." என்று அவர் பெயரையும்இட்டிருந்தார். அந்த நாளிலிருந்து காதல் பரிமாற்றம் அவர் ஞாபகமாக நடக்கிறது.
ஒரு பூக்களின் மூலமாகவோ பொருட்களின் மூலமாகவோ இதை வெளிப்படுத்துகின்றனர். உண்மைக் காதலுக்கு நாமும் பச்சைக் கொடி காட்டுவோம், எதிர்பார்ப்பு இல்லாத அன்பை வாரி வாரி வழங்குவோம். எல்லாக் காதலர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

அன்புடன் விசாலம்
No comments:
Post a Comment