Saturday, April 14, 2007

விசா கிடைக்கும்..!

நாம் எந்தக் கோவிலுக்குப் போனாலும் ஒரு ஐந்து நிமிடமாவது கண்கள் மூடி கைக் கூப்பி பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் ஒரு கோவில் உள்ளது அங்கு ஒரு புதுமை என்னவென்றால்... நாம் கண்களை மூடாமல், நன்கு திறந்து கொண்டு அந்தப் பகவானைப் பார்க்க வேண்டும். அந்தக் கடவுளும் நிச்சயம் கண் கொட்டாமல் நம்மைப் பார்ப்பார். எல்லோரையும் பார்ப்பார் தவிர இன்னொரு புதுமை என்னவென்றால் அங்கு அர்ச்சகருக்கோ அல்லது தட்டிலேயோ, உண்டியிலேயோ ஒரு பணமும் போடக் கூடாது அங்கு உண்டிப் பெட்டியே கிடையாது... என்ன? நம்ப முடியவில்லை இல்லையா? அந்தக் கடவுளோ திரு பாலாஜி அதாவது வெங்கடாசலபதி காசு வாங்காத வெங்கடாசலபதி பார்த்ததுண்டோ? அவர்தான் வட்டியும் அசலுமாக வாங்குபவர் ஆயிற்றே! ஆனால் அதே உயரம் அதை போல் உருவம் பெரிய ஸ்ரீசூர்ணம் அதே புன்முறுவல் பார்த்தால் திருப்பதியில் இருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. அழகாக நம்மை வசீகரிக்கிறார் வியப்பாக இருக்கிறதா? ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
நான் ஹைதராபாத் போன போது இங்கு போயிருந்தேன். இந்த இடம் சில்கூர் ஒரு சின்ன டவுன் முதலில் இந்தக் கோவிலில் நுழைந்த போது கூட்டம் தாங்கவில்லை, என் கணவர் " இந்தக் கூட்டத்தில் என்னால் நிற்க முடியாது {அப்போதுதான் சுரத்திலிருந்து சற்று மீண்டு வந்தவர்} இப்படி பார்த்தால்தானா? என்று என் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். நான் விடவில்லை மறுவாரம் கணவரை அழைத்து கொள்ளாமல் திரும்பவும் போனேன். அன்றும் கூட்டம் வழிந்தது என்ன இது திருப்பதிப் போல் எப்போதும், என்று எண்ணி ஒருவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னது... இங்கு வேண்டிக் கொண்டால் விசா கிடைத்து விடும் {அன்பு விஜி கவனிக்க...} எந்தவித பிரச்சனையும் வராமல் விசா கிடைக்க பாலாஜி வழி செய்து விடுவாராம். இந்தக் கோவில் பாலாஜியை விசா visa பாலாஜி என்றே அழைக்கிறார்கள்.
இங்கு முதலில் வேண்டி கொண்டு 12 தடவைகள் பிரதட்சிணம் வரவேண்டும். நெய் விளக்கும் அர்ச்சனையும் செய்து கண் கொட்டாமல் பாலாஜியைப் பார்க்க வேண்டும். உள்ளே போனால் ஒரு பைசாக் கூட சிலவு இல்லை ஆனால் வெளியே பிச்சைக்காரர்கள் நிறைய மொய்க்கிறார்கள், நம் பிரார்த்தனை நிறைவேறியதும் மறு முறை இந்தக் கோவில் வந்து 108 தடவை சுற்ற வேண்டும். கணக்குத் தப்பாமல் இருக்க 108 கூப்பன் பொருந்திய ஒரு bundle நமக்குத் தருகிறார்கள். ஒரு சுற்று ஆன பின் ஒரு டோக்கன் கிழித்து,
அங்கிருக்கும் ஆணியில் சொருகவேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு சுற்றுக்கும் செய்ய வேண்டுமாம்... அதுதான் எப்போதும் கும்பல் உள்ளது என்றார். தினம் ஒரு லட்ச்ம் பேர்கள் வருகின்றனராம். இது ஹிமாயத் சாகர் காந்திப் பேட் அருகில் உள்ளது.
சுமார் 500 வருடங்கள் பழமையானது வீசா நல்லபடியாகக்
கிடைக்க வேண்டியவர்கள் கண்டிப்பாக இங்கு சென்றால் பலன் கிடைக்கும். நம்பிக்கை தான் வேண்டும். அங்கு இருந்தவர்களிடம் இந்த விவரம் சேர்த்தேன். வாருங்கள்... சில்கூர் போகலாம்!

அன்புடன் விசாலம்

No comments: