Sunday, April 22, 2007

நவராத்திரி...தில்லி,மைசூர்.

மஹாராஷ்ட்ராவில் சின்ன மண்கிண்ணங்களில் பாலிகைத் தெளித்து அதில் தானியங்களின் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து பின் விஜய தசமி அன்று கடலில் கலக்கிறார்கள் அந்தப் பாலிகையின் வள்ர்ச்சியைப் பார்த்து தங்கள் வாழ்க்கையை சிலர் எடை போடுகிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும். மஹாலட்சுமி கோவிலுக்கும் போய் பூஜை செய்கிறார்கள் இப்போது வருவது தில்லி உத்திர பிரதேசம். இங்கு இந்தப் பத்து நாட்களும் ராமர் ராவணனைக் கொன்ற சம்பவமாக எடுத்துக் கொண்டு தர்மம் வெல்லும் என்பதைக் காட்டுகிறார்கள இதில் முதல் நாளிலிருந்தே துளசிதாசரின் ராமாயண நாடகம் தயார் செய்து வெளி மைதானத்தில் நடத்துவார்கள் கூட்டம் தாங்காது ஸ்ரீராம் தியேட்டர் இதில் மிகப் பெருமை பெற்ற ஒன்று அந்த மைதானத்தில் மூன்று அசுர பொம்மைக்ளின் உருவங்கள் 40 அடி உயரத்தில் அமைத்து உள்ளே நிறைய வெடிகளைப் பரப்பி வைத்து விடுவார்கள். மிக்க ஆற்றலுடன் அழகாகத் தயாரிப்பார்கள அந்த மூன்று அசுரர்கள் கும்பகர்ணன இந்த்ர்ஜித் இராவணன் ஆவர் .கடைசிநாள் இராமர் ஒரு அழகான தேரில் வலம் வந்து இராவணைத் துரத்தி துரத்தி அம்பினால் அடிப்பார்கள், கூட அனுமானும் லட்சுமண்னும் இருப்பார்கள் இராவணனும் பெரியத் தேரில் நின்றுகொண்டே முன்னே ஓடுவான் அதன் பின் ஒரு அம்பு இந்திரஜித் மேலேவிழ அந்த பொம்மை அசுரன் மலைப்போல் சாய்வான் உள்ளே இருக்கும் வெடிகள் ஊரைகூட்டிவிடும் இதே போல் கும்பகர்ணனும் மடிவான். பின் ராமராக நடிப்பவர் மிகவும் குறி தவறாமல் அந்த இராவணனாக வடித்த பிரம்மாண்டமான பொம்மையின் மேல் வெகு தூரத்திலிருந்து அம்பு ஏவ அவனும் பூமியில் பெரிய சத்தததுடன் சாய்ந்து மடிவான் பல வெடிகள் உள்ளிருந்து வெடிக்க
பல வர்ண்ஜாலங்கள் நம்மை சிலிர்க்க வைக்க பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் பின் ஒரு ஒளி ஆகாயத்தில் போய்க் கலக்கும். ஆனால் வெடி வெடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டுதான் பார்க்க வேண்டும் அவ்வளவு ஓசை, பார்க்க மன ரஞ்சகமாக இருந்தாலும் சூழ்நிலை
மாசு படுகிறது. சுற்று புற வாயு தூயமையை இழக்கிறது மக்கள் பல

திண் பண்டங்களை தின்ற பின் அங்கேயே போட்டுவிடுவதால் அந்த பெரிய மைதானமும் குப்பைகளால் சூழப்படுகின்றன. இதெல்லாம்
தேவையா என்றும் எண்ணத் தோன்றுகிறது . அடுத்து வருவது மைசூர் தசராவுக்குப் பெயர் போனது இதைப் பார்க்க வெளி நாடுகளிருந்த்தும் வருகிறார்கள். சாமுண்டேஸ்வரி மகிஷாசுரனை வதம் செயததைக் குறித்து கொண்டாடுகிறார்கள். வரிசையாகக்
குதிரைப் படை
யானைப் படை ஆட்படைகள் அணிவகுத்து நிற்க அதன் மேல் அல்ங்கார
உடைகள் கண்ணைப் பறிக்க பல வாத்தியங்களின் இசை நம்மைக் கவர
ஊர்வலம் தொடங்குகிறது எல்லாம் வெண் புரவிகளாக் பார்க்கும் போது
எங்கே இந்திர சபையோ என்று எண்ணத் தோன்றுகிறது டக் டக் என்று குளம்பு ஒலி கிளம்ப அதன் நடை அழகை வர்ணிக்க முடியாது. அவ்வளவு அழகு! ஒரு யானையின் மேல் அம்பாள் அலங்கரிக்கப்பட்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள்... மைசூர் மஹாராஜா அரண்மணையிலிருந்து தொடங்கி மலை மேல் இருக்கும் சாமுண்டேச்வரி கோவில் வரை ஊர்வலம் செல்கிறது. முன்பு மஹாராஜாக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று வந்தார்கள்.
இப்போது கவர்னர் தொடங்கி வைக்கிறார், மாலை அரன்மனை பல வர்ண
விளக்குகளால் மின்னி பூலோகமா சுவர்க்க லோகமா என்று எண்ணத்
தோன்றுகிறது. இத்துடன் வாணவேடிக்கையும் சேர்நது மனது கொள்ளை போகிறது. மொத்தத்தில் மூன்றுதேவிகளும் சேர்ந்து ஒரு பராசக்தியாகி இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியின் இருப்பிடமாகி நம்மை பரிபாலிக்கிறாள்.


பாரதியார்: மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்... என்றும்
வாணி கலைத்தெயவம்! என்று சரஸ்வதியையும்
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி... என்று லட்சுமியையும்
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்...என்று
பார்வதியையும் நவராத்திரி பாடலாகப் பாடியுள்ளார்.
நாம் அந்த அன்பு என்னும் சக்தியை உணர்ந்து நம்மிடம் கலந்து
எல்லோரிடத்திலும் பரப்புவோமாக.
நான் நேரில் பார்த்து அனுபவித்ததை எழுதியுள்ளேன் சில செய்திகள்
விட்டும் போயிருக்கலாம், நீங்களும் உங்கள் ஊரில் சிறப்பாக இந்த
நல்ல நாட்களைப் பற்றி எதாவது இருந்தால் எழுதவும் தெரிந்து கொள்ள
மிக ஆவல். பொறுமையாகப் படிப்பதற்கு நன்றி!

அன்புடன் விசாலம்.

No comments: