Sunday, April 8, 2007

நான் என்னை மறந்தேன் கடலூரில்

தேவா மனுஷ ரூபேண..! என்பது என் விஷயத்தில் மிகவும் சரியாக அமைந்தது. ஆம் அன்று பொன்னான வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையிலும் ஒரு பொன்னாள். என் வாழ்க்கையில் முதல் முதலாக என் அன்பு சகோதரரை சந்தித்தேன். இதில் என்ன ஒற்றுமை என்றால் அவரும் 2ம் நம்பர், நானும் அதே நம்பர். அவரும் விருச்சிகராசி, நானும் அதே... ராசி. அவர் அனுஷம் நட்சத்திரம், நானும் அதே நட்சத்திரம். அவர் நல்ல உயரம் திடகாத்திரமான உடல், இளகிய மனம், விளம்பரம் இலலாத சேவை, சரியான puncutuality தெரிந்துக்கொண்டிருப்பீர்கள், அவர்தான் என் அன்பு சகோதரர் திரு. நடேசன். அவருடன் தொடர்பு கொள்ள செவ்வாயன்று தொலைபேசியில்
பலதடவை முயற்சித்தும் கிடைக்காததால், அன்பு ராமாவிடம் நான் பாண்டிக்குப் போகும் விஷயத்தைச் சொல்லி வைத்தேன். பாவம் எனக்காக விடுமுறையும் எடுத்திருக்கிறார். நான் வெள்ளியன்று அவருடன் பேசினேன். சொன்ன நேரத்தின் படி 2 .30 க்கு அன்னை ஆசிரமம் வாசலில் வந்து எனக்கு போன் செய்தார். நான் என் புடவையின் கலர் சொல்லி காரில் வருவதையும் சொன்னேன்.

இருவரும் ஒருவர்க்கொருவர் பார்த்ததில்லை. ஆகையால் இந்த அடையாளங்களைச் சொன்னேன். ஆனாலும் என்ன ஆச்சரியம் எனக்கு அவரைக் கண்டு கொள்ளமுடிந்தது. அதேப் போல அவரும் வேகமாக என்னிடம் வந்தார். சாதாரணமான தினம் என்றால் கண்டு பிடித்து விடலாம். ஆனால் அன்னையின் தரிசனத்திற்காக கூட்டம் நிரம்பிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் இருவரும் விஜாரித்துக்
கொள்ளாமல், ஒருவர்க்கொருவர் கண்டு கொண்டது எனக்கு வியப்பை உண்டு பண்ணியது. இருவரும், காரில் அமர வண்டி ஓட ஆரம்பித்தது...

(தொடரும்)

அன்புடன் விசாலம்

No comments: