Friday, April 6, 2007

சாம்பலின் பெருமை

ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சாம்பல் நல்ல நதியில் தூவப் படுகிறது. சிலர் காசிக்குச் சென்று கங்கையில் கரைப்பார்கள், அன்னை இந்திரா காந்தி அவர்களின் அஸ்தி இமயமலையிலும் கூட ஹெலிக்காப்டரில் எடுத்துச் சென்று மேலிருந்து
தூவினார்கள், ஆனால் ஒருவனது சாம்பலை அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இளம் தாயும் தங்கள் வயிற்றில் அந்தச் சாமபலைப் பூசிக்கொண்டார்கள், ஏன் என்றால் தங்களுக்கும் இது போல் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பதால்...
ஆம் அந்த வீர மகன், எல்லோராலும் போற்றப்பட்ட மகன் நாட்டுக்காக தன் உயிரையே கொடுத்த தியாகி இளஞ்சிங்கம் ஸர்தார் பகத் சிங்தான், 1931ல் மார்ச்-23ந்தேதி பகத் சிங்கைதூக்கிலிட்டு, பின் வெள்ளையர்கள் அவனை எரித்தச் சாம்பலை அவன் தாயிற்கு அனுப்பி வைத்தனர்,அந்த வீரத்தாயைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம், பாவம் தந்தை

மனம் சோர்ந்து ஒரு கருணை மனு கொடுத்தால் மகனைக் காப்பாற்றலாம் என்று வக்கீல் சொல்லக் கேட்டு ஒரு மனு பத்திரம் வாங்கியும் வந்தார், தன் மனைவியைக் கூப்பிட்டார்,
"பகத்சிங்கின் தாயே நமக்கு நம் மகன் வேண்டாமா? இந்தக் கருணை மனுவில் ஒரு கையெழுத்துப் போடு நான் போட்டுவிட்டேன், நீதான் பாக்கி" என்று அந்தப் பத்திரத்தைக் கொடுத்தார், அந்தத் தாய் அதை வாங்கி பொறுமையாகப் படித்தாள், பின் சுக்குக் சுக்காகக்
கிழித்துப் போட்டாள் "மானமில்லையா எனக்கு? வெள்ளையனிடம் போய் உயிர்ப்பிச்சை கேட்க வேண்டுமா? என் மகன் வெள்ளையனுக்கு எதிராக நின்று ஜெயித்து வெள்ளையனை வீழ்த்தினான் என்ற பெருமையிலே அவன் சாவதை நான் விரும்புவேனே தவிர கருணை

மனு பெற்று உயிர் வாழ்வதை நான் விரும்ப மாட்டேன்! அவன் கோழயில்லை... வீரன்! என் மகன் வீரன் அவன் புகழோடு மடிவதைப் பார்த்தாலும் பார்ப்பேன் வெள்ளையன் தயவில் உயிருடன் அலைவதை ஒருக்காலும் விரும்ப மாட்டேன்"
ஆஹா இப்படி ஒரு தாயா? தலை வணங்குகிறேன் தாயே!


அன்புடன் விசாலம்

No comments: