Sunday, April 15, 2007

இப்படியும் ஒரு விடைத் தாள்

அன்பு நண்பர்களே! நாட்டில் கல்வியின் தரம் மிகவும் உயர வேண்டும். பணம் பெருக்குவது ஒன்றே குறிக்கோளாக சில பள்ளி ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அதற்கு உதாரணமாக இந்தச் சொந்த அனுபவத்தை எழுதுகிறேன். உங்கள் பொன்னான நேரத்தில் இதைப் படிக்கவும்,சிறிது சமயம் எடுத்துக்கொண்டால் மிகவும் நன்றியாக இருக்கும்.
பரீட்சை ஆரம்பித்து விட்டது. நான் அனுபவித்த ஒரு உண்மைச்
சமபவம் இது. எங்கள் பள்ளியில் பல பெரிய அறைகள் இருந்ததால், board examக்கு எங்கள் பள்ளி ஒரு centre ஆக இருக்கும். அதில் முக்கியமாக ஸ்ப்ரிங்டேல்ஸ் பள்ளிக்கு போக மீதி ஒரு பெரிய ஹாலை தனியாக நடத்தப்படும்{tutorial private students}மாணவ மாணவிகளுக்கு ஒரு சமயம் கொடுக்கும்படி நிர்பந்தம் வந்துவிட்டது. அதாவது polotical pressure என்று சொல்லலாம். அந்த மாணவர்களோ பல தடவை கோட் fail அடித்தவர்கள் ஆகையால் வயது சுமார் 20வரையும் இருக்கும். இந்த ட்யுடோரியல் நிறைய பணம் வாங்கிக் கொண்டு... 9 அல்லது பத்தில் தோல்வியுற்றவரும் வெற்றி பெறலாம் என்று நிறைய விளம்பரங்கள் கொடுத்து, மயக்க வைத்து பல அரைவேக்காடுகளைச் சேர்த்துக்கொண்டு விடுவாரகள். அதில் சேர்ந்தவர்கள் தாங்கள் பி,ஏ படிப்பது போல் படு ஸ்டைலுடன் ஜீன்ஸில் முழங்காலில் ஓட்டைப் போட்டுக்கொண்டும், கீழே கத்தரித்து விட்டுக் கொண்டும் ஒரு காதில் வளையம், வாயில் சூயிங்கம் அல்லது பான்பராக் என்று வருவார்கள். பெண்களோ அதற்கும் மேல் எல்லோரும் அழகு போட்டியில் பங்கு பெறுபவர்கள் போல் இருக்கும். பேஷனின் ஆரம்பமே அவர்களிடம் தான். பாவம் அவர்களது பெற்றோர்கள் ஒரு தையல்காரரோ அல்லது மளிகைக்கடை வியாபாரியோ, இஸ்திரி போடுபவர்களாகவோ இருக்கும். தங்கள் குழந்தைகள் கல்லூரி வரைப் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இது முன்னுரை... இனிமேல் தான் சூடு பிடிக்கும்! ஒருசமயம் என்னை அந்தஹாலுக்கு மேற்பார்வையாளராக delhi administration நியமித்திருந்தார்கள் அங்கு பொறுப்பு எற்பது மிகவும் சிரமானது ஏன் என்றால் கண்களைக் கொட்டாமல் எல்லா திசைகளிலும் சுழற்ற வேண்டும். அவர்கள் ஒளித்து வைத்திருக்கும் furrah அதாவது விடை எழுதிய துண்டு பேப்பர்கள் ஷர்ட்டின் மடிப்பு, காலின் உட்புறம், சாக்சின் உள்புரம், பெண்களுக்கு உள்சட்டைக்குள், என்று பட்டியல் நீளும்... அதை எல்லாம் கண்டு பிடித்து முதலிலேயே எடுக்க வேண்டும். நடுவில் அவர்களைப் பிடித்துவிட்டால் ஹாலிலிருந்து வெளியே தள்ள உத்தரவு உண்டு. ஆனால் பின்னால் நமக்கு அதனால் அபாயம் விளையலாம். அவர்கள் பழிக்குப்பழி வாங்கி விடுவார்கள்.
எப்படி என்பது அவரவர் அதிருஷ்டத்தைப் பொருத்தது. இப்போது பரீட்சை ஆரம்பமாகிவிட்டது நான் எல்லோருக்கும் வினாத்தாள் கொடுக்க ஒரு பெண் பல நிமிடங்களாக அதைப் படித்து பின்சும்மா இருப்பதும் எனக்கு சந்தேகம் வந்தது. அன்று ஆங்கிலம் வினாத்தாள், எங்களுக்கு ஒருவர் அருகில் பல நேரம் நிற்க அனுமதி இல்லை. வினாவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லலாமே தவிர வேறு ஒன்றுக்கும் அனுமதி இல்லை. இருப்பினும் ஒரு ஆர்வத்தில் அந்தப் பெண அருகில் நான் போய் பார்க்க அவள் ஹிந்தியில் எதோ எழுதிக் கொண்டிருந்தாள். நான் ஜாடையாக ஏன் என்று கேடக அவள் அழ ஆரம்பித்தாள். நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். பின் இருபது நிமிடம் கழித்து வரிசையாக நடந்து அந்தப் பக்கம் திரும்பி வந்தேன். அவள் எழுதிக் கொண்டிருந்தாள் ஒரு curiosity ல் படிக்க ஆரம்பித்தேன், அவள் எழுதியது " பரீட்சைப் பேப்பர் திருத்தும் அன்பரே நமஸ்தே! எப்படியாவது இந்தத்தடவை ஒரு ஐம்பது மார்க் போட்டு விடவும். நான் பஸ் செய்ய வேண்டும். என் அம்மா துணி துவைத்து அந்தப் பணத்தில் என்னைப் படிக்க வைக்கிறாள். எனக்கு படிப்பு வரவில்லை, சினிமாவில் நடிக்க ஆசை அதற்கு ஒரு பத்து கிளாஸ் படிக்கவேண்டுமே! நீங்கள் என்னை இந்தத் தடவை தூக்கி விட்டால் நான் உங்களுக்கு ஒரு சிறந்த வெகுமதி அளிப்பேன். என் அன்பு முத்தங்கள்" இப்படி பல அபத்தங்கள் எழுதி இருந்தாள். எனக்கு இதை படித்ததும் மிகவும் வருத்தம் உண்டாயிற்று அந்தத் தாளை எடுத்து தனியாக complaint செய்ய, எடுத்து வைத்தேன். ஆனால் என் மேலதிகாரி என்னிடம் "இந்த வம்பில் மாட்ட வேண்டாம்! ஏனென்றால் பின்னால் ஏன் நின்று படித்தீர்கள்? என்று நம் மேலேயே பாய்வார்கள் பலதடவை administrationக்கு நடக்க வேண்டும்" என்று பேசாமல் bundle ல் சேர்த்து அடுக்கிவிட்டார்கள். எல்லாம் நன்மைக்கே! என்று எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு இனிமேல் இப்படி செய்தால் terminate செய்வோம் என்று பயமுறுத்தி வைத்தோம் நாட்டின் நிலமை கல்வி விஷயத்தில் எங்கேயோ போகிறது. என்றாவது திருந்தி வரும் என்று நம்பிக்கைக் கொள்வோம்! {சில சொற்கள் தமிழில் தெரியாததால் ஆங்கிலத்தில்} மன்னிக்கவும்.

அன்புடன் விசாலம்

No comments: