Sunday, April 29, 2007

“ஸ்வீட் சாப்பிடாதே...!”

பம்பாயில் நான் இருக்கும் போது, நான் ஒரு நாடகக் குழுவில் இருந்தேன். எல்லோரும் அதில் பெண்கள்தான். அநேகமாக ஒரு ஆணின் வேஷம் எனக்குத்தான் இருக்கும். என் உடல் வாகைப் பார்த்து கொடுத்தார்களோ என்னமோ? ஆனால் அதில் எனக்கு ஒரு திருப்தி,
ரொம்ப நாளாக் pants shirts போட ஆசை இருந்தது ஆனால் வீட்டில் கேட்க பயம். அவர்கள் குழந்தைகள் நலத்திற்காக சற்று கண்டிப்பாக் இருந்தவர்கள் நல்ல விதைத்தால் தானே நல்ல பயிர். பெற்றோர் சொல் மீறாத பெண் நான். ஆகையால் அதை அப்படியே விட்டு விட்டேன். நல்ல வேளையாக நாடகத்தில் ஆண்கள் வேஷ்த்தில் நான் என்ற போது மனத்தில் ஒரு மகிழ்ச்சி! எங்கள் நாடகம் சுமார் 2 மணி நேரம் செல்லும்.
கூட்டம் நிறைய வரவேண்டுமே! என்று பெரிய நாடக கம்பெனி குழுவை வரவழைத்து 5 நாடகங்களுக்குள் ஒரு நாடகமாக எங்கள் நாடகம் திணிக்கப்படும் 6 நாடகத்தின் சீசன் டிக்கெட் விற்கப்படும்.
ஒரு சமயம் மறைந்த திரு.சஹஸ்ரநாமம் குழு பாரதி கலா மன்றத்தில் நாடகம் அரங்கேற்ற வந்திருந்தது மூன்று நாடகங்கள் முடிந்தவுடனே எங்கள் யாவருக்கும் நிலா சாப்பாடு! ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்து சாப்பாடு ஆனதால் நிறைய ஐட்டம் இருந்தது. அப்பொது என் அருகில் பிரமிளா என்ற் தேவிகா நடிகை உட்கார்ந்திருந்தார். நடிகர் முத்துராமன்
வி.கோபாலகிருஷ்ணன் போன்றவரும் இருந்தனர் நிலா சாப்பாடு தரையில் ஜமக்காளம் விரித்து நடந்தது. எல்லோரும் நாடகத்தைப் பற்றி தமாஷாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமதி.தேவிகாவிற்கு சாப்பிட எது வந்தாலும் "கொஞ்சமாக சாப்பிடு ஸ்வீட் சாப்பிடாதே! என்று சஹஸ்ரநாமம் அவர்கள் சொல்லி வந்தார். நான் வியந்து அவரிடம்
"ஏன் இப்படி சொல்லுகிறீகள் பாவம்! தேவிகா நன்றாக சாப்பிடட்டுமே" என்றேன், அதற்கு அவர் "விசாலம் நாளை 'போலீஸ்காரன் மகள்' நாடகம் அதில் தேவிகா மயங்கி விழும் போது நான் தான் அவளைத் தூக்க வேண்டும். எடை கூடினால் எப்படித் தூக்குவது?" என்றார். எல்லொரும் சிரித்தனர். பல வருடங்கள் ஆனாலும் நடிகர் சஹஸ்ரநாமத்தின் நடிப்பும் அவர் நல்ல மனதும் பசுமையாக இன்றும் இருக்கிறது . நாடகம் போது சிறு தவறுகள் ஏற்படும். நடக்கும் தெரு காட்சியில் நாற்காலி தங்கிவிடும். சில சமயம் பூந்தொட்டி எடுக்க மறந்து விடும். அப்போது வசனத்தில் இல்லாததை நாமே அதற்கு பொருத்தமான வசனத்தை நுழைத்து பார்க்கிற்வர்களுக்கு தெரியாதபடி
சாமர்த்தியமாக நடந்த்துக் கொள்ள வேண்டும்.நாடகக் கலை மிக சிறந்த
கலை அதற்கு முன்னளவு வரவேற்பு இல்லை. நாடகம் முன்பு போல் வளர அன்னையின் அருள் கிடைக்கட்டும்.

விசாலம்
.


No comments: