ஸ்ரீனிவாசன்...ஸ்ரீ என்றால் லட்சுமி... வாசன் என்றால் திருமகளைத் தனது மார்பில் வைத்திருக்கும் மஹாவிஷ்ணு, அவள் அங்கு நித்தியம் வாசம் செய்கிறாள் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கிடைந்த போது ஜகஜ்ஜோதியாய் வெளிப்படுகிறாள் திருமகள், அவள் அழகே அழகு! எல்லோரையும் கொள்ளைக் கொண்டது, அவளை அடைய வேண்டும் என்று எல்லோரும் துடித்தனர். ஆனால் திருமகளோ ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடையவேண்டும் என்று தவம் இருக்கிறாள். அவள் நினைத்தபடியே ஸ்ரீ மகாவிஷ்ணு அவளைத்தன் மார்பில் அமர்த்திக் கொள்கிறார். அந்த நாள் சித்திரை மாதம் வளர்ப்பிறை திருதியை, இதுதான் அக்ஷயதிருதியை என்கிறார்கள். க்ஷயம் என்றால் தேய்வு, அக்ஷ்யம் என்றால்வளர்தல் பெருகுதல் நிறைதல் என்று சொல்லலாம். இன்றைய தினம் எந்த நல்லகாரியங்கள் செய்தாலும் அது வளரும் என்ற நம்பிக்கை, ஒன்றுக்குப் பத்தாக பத்து நூறாக நூறு ஆயிரமாகப் பெருகும். அதனால்தான் பெண்களின் கூட்டம் தங்கக் கடைகளில் அலை மோதுகிறது. சரியான சுயநலம்! இன்றைய தினம் யாராவது தங்கக் காசு வாங்கி ஒரு ஏழையின் தாலி செய்யக் கொடுக்கிறார்களா? அப்படி இருந்தால் அதுதான்உண்மையான 'அக்ஷ்யதிருதியை' இன்றையதினம் மஹாவிஷ்ணு லட்சுமி சமேதராக பூஜை செய்கிறார்கள். குளித்த பின் நுனி இலைப் போட்டு அதில் அரிசி பரப்பி கலசம் வைத்து, பின் கணபதி பூஜை செய்து கலசப் பூஜையும் செய்து பின் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்து பாயசம் நைவேத்தியம் செய்வார்கள். ஒரு படி நிறைய நெல்லும் வைப்பார்கள் இன்றைய தினம் நிறைய வஸ்திர தானம் அன்னதானம் போன்று செய்தல் நலம். வியாபாரிகள் வியாபார நோக்கோடு விளம்பரம் செய்து இன்று பொன் வாங்கினால் வருடம் முழுதும் பொன்னாக நிறையும் என்று பேராசையை வளர்த்து தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். என்றுதான் பெண்கள் தங்கம் என்று அலைவதை விட்டு போதுமென்ற மனமே... என்று இருப்பார்கள். இதற்கு சிலவு செய்வதை விடபொதுநலத் தொண்டில் ஈடுபடலாமே! நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே சங்குசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷமி நமோஸ்துதே!
அன்புடன் விசாலம்
No comments:
Post a Comment