Sunday, April 8, 2007

ஆராதனை நாள்

தியாகராஜசுவாமிகளின் ஆராதனை நாளில் ஒரு ஆங்கிலேயரும் ஒரு அமெரிக்கரும் பங்கு பெற்றுச் சிறப்பித்தினர். வியப்பாக இருக்கிறதா?வருடம் 1953-ல் மிஸ்டர்.ஜான் கோட்ஸ் என்பவரும் மிஸ்டர்.ஹாரிபவர்ஸ் என்ற அமெரிக்கரும் திருவையாறு உத்சவத்திற்கு வந்திருந்தனர். அவர்களும் பகுள பஞ்சமி அன்று காவேரியில் ஸ்நானம் செய்து, நெற்றியில் திருநீரும் குங்குமமும் அணிந்து, இடுப்பில் வேஷ்டி தரித்து அங்கவஸ்திரத்துடன் கோஷ்டியில் அமர்ந்து கொண்டு எல்லா பாடல்களையும் பாடினார்கள். இந்நிகழ்ச்சி முடிந்ததும் அந்த அமெரிக்கர் பவர்ஸ் தானும் தனியாக மேடைக் கச்சேரி செய்ய விரும்புவதாகவும், அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. 'ஸ்ரீ ரகுவரபரமேய' என்று காம்போதி ராகத்திலும், 'கீதர்த்தமு' என்று சுருட்டி ராகத்திலும் அந்தமண்டபத்தில் 45000 ஜனங்கள் முன் பாட, எல்லோரும் பரவசமானார்கள். அ வரின தியாகராஜப் பக்தி அவரை மேடையில் ஏற்றிவிட்டது ஸ்ரீமான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் அவரை மிகவும் ஊக்குவித்தார்.

அன்புடன் விசாலம்

No comments: