Friday, April 6, 2007

சின்னமஸ்தா தேவி

இந்த நவராத்திரி வந்தால் நான் தில்லியில் பிர்லா மந்திர் அருகில் இருக்கும் காளி பாரி kali bari என்ற கோவிலை மறக்க முடியவில்லை. பல தடவைகள் இங்கு போயிருக்கிறேன் அந்தக் காளியின் கோவில் மிகப் பழமை வாய்ந்தது. முகலாய வமசத்தினர் அதன் அருகில் படை எடுத்தப் போதும் கூட , கோவில் ஒரு சேதமாகாமல் தப்பித்தது. முகலாயர்கள் இந்தக் கோவில் வரை வந்தும் மனது மாறி திரும்பியதாகச் சொல்லுகிறார்கள். அங்கு பலவிதமான வர்ணப்
படங்கள் paintings உள்ளன, எல்லாம் அம்பாளின் பல ரூபங்கள்.
அந்தப் படங்களில் ஒன்று என் மனதை மிகக் கவர்ந்தது. ஆனால்
மிகவும் பயங்கரமான ஒன்று இப்படியும் ஒரு அம்மனா?

என்ன கொடூரம் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்த அம்பாள் பெயர் 'சின்ன மஸ்தா'. இந்த நவராத்திரியில் இவளுக்கும் தனி பூஜை உண்டு. சின்ன என்றால் துண்டித்தது மஸ்தா என்றால் தலை என
நினைக்கிறேன். சின்ன மஸ்தா தன்னுடைய ஒரு கையில் தன்னுடைய வெட்டியத் தலையையே வைத்திருக்கிறாள். தன் தலை அதுவும் அப்போதுதான் முண்டித்த தலை இரத்த வெள்ளம் அருவி போல்...என்ன பயங்கரம். தலையில்லாமல் முண்டமாகநிற்கிறாள், வெட்டப்பட்ட கழுத்திலிருந்து இரத்தம் பெருகி மூன்று ஊற்றுக்கள்
வெளியே வந்து விழுகின்றன. இடை,பிங்கலை, சுழுமுனை வழியாக
வெளி வந்து இந்தக் குருதி ஊற்றுக்கள் பாய்கிறது வெளியே...
இவளுடையக் கையில் இருக்கும் வெட்டப்பட்டத் தலை மதய நாடியான
சுஷ்ம்னாவிலிருந்த வரும் இரத்ததைப் பருகுகிறது இதைப் பற்றி அங்கு
இருந்த ஒரு பண்டித்ஜியிடம் கேட்டேன். நாம்,நமது இந்திரியத்தை அடக்க
முற்படும் போது தலை உச்சி வரை அமுத நீர் ஓடி சஹஸ்ராரா சக்ராவைத் தொட ஆனந்த நிலை, சமாதி நிலை ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்படுவதற்கு உதவுகிறாள் சின்னமஸ்தா. இந்திரியங்களை ஒடுக்கினால் மட்டும் போதாது, மனதிலுள்ள நான் என்ற மமதையும் நீக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத் தன் தலையையே வெட்டி

தன் கையில் வைத்திருக்கிறாள். கரத்தில் ஒரு கத்திரிக்கள்ளது இது சம்சார பந்தததை வெட்டிக் கொண்டு நான் பிரம்மம் என்று உணர வைத்திருக்கிறாள். இவள் மேலும் காம புருஷனையும் ரதியையும்
காலில் கீழ் மிதித்துக் கொண்டிருக்கிறாள் இதற்கு பண்டித்ஜி கொடுத்த

விளக்கம் என் மனம் ஏற்கவில்லை. உலகமே இதில் தானே அடங்கி இருக்கிறது.ஐந்து இந்திரியங்களுடன் மனதையும் சேர்த்து
ஆறாக்கி சஷ்டி தேவி என்றும் இவளைக் கூறுகின்றனர். இவளே சக்தியில் வித்யுத் சக்தி என்ற மின் சக்தி உண்டு செய்கிறாள். இந்த மின் சக்தி குண்டலினி தியானத்தில்மெதுவாக மேலே ஏறி
ஜீவாதார சக்தியாக மாறி, பின் மின் அதிர்வைத் தருகிறது ரிஷிகள் இந்த மின் அதிர்வை உணர்ந்துமேலும் மேலே சிரம் உச்சி வரை எடுத்துப் போக BLISS என்ற பேரானந்தம் கிடைக்கிறது.
இந்த சக்தி உண்டாக்க காரணமான

அந்த சின்ன மஸ்தாவை வணங்குவோம்.

"யா தேவி ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம;;
யாதேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நம்ஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம;
யதேவி ஸர்வ பூதேஷு சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம;; "

No comments: