Friday, April 20, 2007

பாதைகள் இரண்டு

நடந்தான் வழிப்போக்கன்,
நடந்துகொண்டே இருந்தான்
பார்த்தான் இரண்டு பாதைகளை
திரும்புவது எங்கே? குழம்பினான்,
தலையைச் சொறிந்தான்
ஊரே அடங்கி இருந்தது
கடவுள் வந்தார்,


"என்னப்பா தம்பி
திசை தெரியவில்லையா?"
வ்ழிப்போக்கன் கேட்டான்.
"இரண்டு பாதைகள் உள்ளதே!
எங்குபோவது?"
கடவுளின் பதில்
"உனக்கு எது பிடித்ததோ அதில் நட"
கூர்ந்து பார்த்தான்
கண்ணில்பட்டது
நல்ல செப்பனிட்ட பாதை ஒன்று
அடுத்து இருந்தது கல் முள் அடங்கிய பாதை
நடந்தான் நல்லபாதையிலே
போனான்... போனான்... போய்க்கொண்டே இருந்தான்.
கடைசியில் நரகம் தெரிந்தது.
வியந்து நின்றான்
மீண்டும் வ்ந்தார் கடவுள்
"என்ன கடவுளே! நியாயமா இது?
நரகத்திற்குப் போக இவ்வளவு நல்ல பாதையா?
சுவர்க்கத்திற்குப் போக முள்ளும் கல்லுமா?
"அட முட்டாள் மனிதா
பலகோடி மனிதர்கள்வருவது நரகம்
பாவம் அவர்கள் நடகக நல்லபாதை வேண்டுமே!
சுவர்க்கத்திற்கு ஏதோ ஒருவர்
அத்தி பூத்தாற்போல் வருகிறார்.
அவர் லட்சியம் ஒன்றுதான்
கடவுளை காணவேண்டும்
தன் இலட்சியம் நிறைவேற
முள் என்ன கல் என்ன
உயிரையே கொடுப்பார்களே
அதான் அந்தப் பாதை சீராக்கவில்லை"
புன்னகையுடன் மறைந்தார் கடவுள்

விசாலம்

No comments: