Friday, April 13, 2007

காதலியைக் கவர ……


காதலியைக் கவர... சில {அசட்டு}யோசனைகள் படித்து விட்டு சிரிக்கவும். சிரிப்பு வரவில்லை என்றாலும் நான் கஷ்டப்பட்டு எழுதியிருப்பதால் சிரித்து விடவும்.
1.கோதுமை அல்வா கிண்டவும், அதை வில்லைப் போடவும் ஒரு வில்லையின் நடுவில் காதலிக்குப் பிடித்த மோதிரத்தை உள்ளே அழுத்தவும், மூடிவிடவும் ஆசையுடன் அவளுக்கு அளிக்கவும், அதை அவள் முழுதாக வாயில் போடாமல் பாதியாகப் பிய்த்து திங்கச் சொல்லவும், அவள் திறந்து பார்ப்பாள்... அதில் மோதிரம் மின்னும்... பின் என்ன? அவள் கண்கள் மலரும்... என்ன அன்பு? என்று வியப்பாள்... மோதிரம் வாங்கினது பெரிதல்ல ஆனால் உனக்காக அல்வா கிளறியது தான் மிகப் பெரிய காரியம். தோள் எல்லாம் ஒரே வலி என்று சொல்லுங்கள். தனக்காக இவ்வளவு கஷ்டப் பட்டிருகிறானா என் காதலன் என்று தோளைத் தடவிக் கொடுப்பாள். பின் என்ன ஜெயம்தான்.
2. ரொட்டி மாவு பிசைந்து ரொட்டி தட்டவும்... முதலில் தட்டுபவர்க்கு பழக்கமில்லாததால் இந்தியா போலும் வரும், வட்டமாக வராது மிகவும் சுலபமாகப் போய்விட்டது அழகாக இதயம் ஷேப்பில் தட்டி{அது தானாகவே வரும்} பின் அதில் சென்னாவில் ஐ லவ் யூ..! என்று கேக்கில் அலங்கரிப்பது போல் செய்து அளிக்கவும்... தோசையிலும் செய்யலாம்
3.ஒற்றை சிவப்பு ரோஜா மலரை ஒரு முள்ளுடன் வாங்கவும் அழகாக ரோமியோ கொடுப்பது போல் முட்டிப் போட்டு கொடுக்கவும். வேண்டுமென்றே அவளிடம் கொடுக்கும் போது முள் உங்கள் கையில் குத்தட்டும்... இப்போது உங்கள் விரலில் இரத்தம் பெருக அவள் பதறிப்போய் துப்பட்டாவைக் கிழித்து விரலைதொட்டு நாசூக்காக கட்டுவாள்.
பின் என்ன ஜெயம் தான்... காதல் கனிந்து விடும்!
இதில் அதிருஷ்டமும் கை கொடுக்க வேண்டும் பெண்ணின் மனதை எப்படி எடை போட முடியும்?



அன்புடன் விசாலம்

No comments: