Saturday, April 7, 2007

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

கருணா சாகரம் சாந்தம்
அருணாசல வாசினம்
ஸ்ரீ சேஷாத்ரி குரும் வந்தே
பிரும்ம பூதி தபோநிதிம்
அன்புத் தாய் மரகதம்
பெற்றெடுத்த உத்தமனாம்,
சேஷாத்ரி என்ற பெயரும் சூட,
ஒரு மரகதமாகவே ஒளிர்ந்தார் ,
ஒரு தெய்வக் குழந்தை ஆனார்.
ஒரு சித்தப் புருஷர் அவதரிதார்.
ஒருநாள்...தாயுடன் அவர்...
பொம்மைக் கடைக்குச்செல்ல
பொம்மைக் கேட்டக் குழந்தை
ஒரு கிருஷ்ண பொம்மை எடுக்க
காசு வாங்க மறுத்தார், கடைக்காரர்
அந்தத் தங்கக் கையைப்
பிடித்தும் கொண்டார்.
"சாதாரணக் குழந்தையில்லன் இவன்
கைப்பட்டாலே பொன்னாகும் அம்மா"
பெற்றோரின் மறைவு
மனதில் புகுந்த வைராக்கியம்,
சேஷாத்ரி உதித்தது நம் பாக்கியம்.
மனம் போனது இறைச் சிந்தனையில்,
நேரம் கழிந்தது சிவபூஜையில்,
மயானத்திலும் உபாசனம்,
சிவபெருமானின் தரிசனம்,
வானத்தில் பாடிப் பறக்கும்
தேவதையும் கண்டார்,
பார்த்ததைப் பகிர்ந்தும் கொண்டார்,
"பைத்தியம் பிடித்தது" என்ற உறவினர்,
'மயானம் போனால் வீடும் நுழையாதே'
என்ற உத்தரவும் பிறந்தது,
வீட்டை விட்டார்,
கோவிலில் அடைக்கலம்,
கண்டார் ஒரு பொன்மேனி யோகியை
அவர் அணிந்தது தேங்காய்கப்பறை,
நான்கு சீடர்கள் உடன் இருக்க,
தட்சிணாமூர்த்தி தரிசனம்.
மெய்சிலிர்த்தார்
பரவசமானார்,
கண் நிரம்பி குளமாகி கைக்கூப்பி
உடலும் விழுந்தது சாஷ்டாங்கமாக,
அவர் நிலைக் கண்ட குரு,
திருவாய் மலர்ந்தார்
அருளினார் நயன தீக்ஷை
வழங்கினார் ஞான உபதேசம்,
தன் நிலை மறந்தார்,
தன்னையும் மறந்தார்,
வந்தனர் உறவினர்,
"தகப்பனார் சிரார்த்தம்"
அழைத்தனர் அதட்டலுடன்.
மசியவில்லை சேஷாத்ரி
"நான் சன்யாசி
சன்யாசிக்கு கர்மமேது?"
வலுக்கட்டாயமாக
இழுக்கப்பட்டார்.
திதி முடியும் வரை
தள்ளப் பட்டார் ஒரு அறையில்
கதவும் பூட்டப்பட்டது,
பித்ரு கர்மா முடிந்தது
கதவும் திறந்தது.
"சேஷாத்ரி…சேஷாத்ரி...
எங்கே போனாய்?"
எங்கே போனார், எப்படிப் போனார்?
மாயமாய் மறைந்து விட்டாரே !
சித்த புருஷர் ஆயிற்றே...
அடைத்து வைக்க முடியுமா?
திருவண்ணாமலை

சித்தர்கள் க்ஷேத்திரம்,
முக்திக்கு பாத்திரம்
அங்கும் இங்கும் அலைந்தது
சேஷாத்ரி என்ற பாத்திரம்
வானமே கூரை
எங்கும் இருந்தார்,
எதையோ சாப்பிட்டார்,
எல்லோரையும் வணங்கினார்.
"ஸர்வம் பிரும்ம மயம்"
எங்கும் பிரும்மத்தைக் கண்டார்,
ஒரு ஏழு கழுதைகளை வணங்கி
கண்களில் ஒத்திக் கொள்ள
சிரித்தனர் மக்கள்,
ஒருவர் துணிச்சலுடன் கேட்டார்,
"என்னப்பா...கழுதையை ஏன்
கண்களில் ஒற்றிக் கொள்கிறாய்?"
"கழுதையில்லை அப்பா இது
சப்த ரிஷிகள் அல்லவா?
அஹஸ்தியர் ஜமதக்னி...
என்று வரிசைப்படுத்த
மக்கள் மெய்மறந்தனர்.
நடமாடும் இறைவன் ஆனார்
பேசும் தெய்வம் ஆனார்
அவதார புருஷர் ஆனார்
அரும் பெரும் சித்தர் ஆனார்
அருணாசலேச்வருடன் கலந்தார்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவர் சரித்திரம் படித்தப்பின் தபோவனம்

சென்று அவர் தரிசனம் செய்து வந்தேன் அந்தத் தினத்திலிருந்து அவர் சரித்திரத்தை எழுத ஆவலாக இருந்தேன். ஒரு சிறு முயற்சி
அவ்வளவுதான், தயவு செய்து படிக்கவும்.

அன்புடன் விசாலம்.

No comments: