Friday, April 13, 2007

கண் தானம்



கண் தானம் என்பது ஒரு மிகச் சிறந்த ஒன்று!

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

என்பதிலிருந்து கண் நமது உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிய வருகிறது. நான் என் தோழியின் அம்மா இறந்தவுடன் அங்கு போயிருந்தேன். அப்போது ஒருவர் கண் தானம் வங்கியிலிருந்து வந்து கண்தானம் செய்ய முடியுமா என்று கேட்டார்,
ஒரு மணிநேரம் இதைப் பற்றி எல்லோரும் அலச நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.
ஒரு முடிவுக்கும் வரவில்லை. அத்துடன் அந்தக் கண்ணை எடுக்கும் குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டதால் அந்த மனிதர் திரும்ப போய் விட்டார்.
இப்போது இன்னொரு சம்பவம்... பத்ராசலம் அருகே, கம்மம் என்ற இடத்தின் அருகே, ஒரு கிராமத்தில் திரு சுரேஷ் என்ற ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் தன் தாய் க்ளுகோமா என்ற கண் பிரச்சனையால் அவதிப்பட்டு கண்களை இழந்தார். அந்தத் தாயின்
நிலமை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் மேலோங்க அதற்கென்றே உழைத்தார். தன் பள்ளி நேரம் போக வீட்டிற்கு வீடு சென்று கண்தானம் பற்றி எடுத்துரைத்து அந்தக் கிராம மக்களைக் கவர்ந்தார். சாப்பாடு உறக்கம் இல்லாமல் உழைத்தார், பின் அந்தக் கிராம மக்கள் சுமார் நானூறு பேர்களையும் இதற்கு மனமொத்து சம்மதிக்க வைத்தார். பின் கண் வங்கியிலிருந்து நுழைவு பத்திரம் எல்லோருக்கும் கொண்டு வந்து தானே நிரப்பி அவர்களின் கையெழுத்தையும் பெற்றிருக்கிறார். அந்தத் தொண்டில் தான் கடவுளைக் காண்கிறோம்! அவர் செயலுக்கு நான் தலை வணங்குகிறேன்! நாமும் நம் கண்களைக் கொடுக்கலாமே!

அன்புடன் விசாலம்

No comments: