Sunday, April 8, 2007

பொங்கல் திருநாள்!


சூரியன் உத்தராயணத்தில் பிரவேசிக்கும் நாள்தான் இந்தப் பொங்கல் திருநாள்!
இதை மகர சங்கராந்தி என்று வடக்கில் சொல்வார்கள். சூரிய பகவான் நமக்கு, கர்ம யோகத்தை விளக்குகிறார். நம் மனதிலுள்ள இருளை நீக்கி 'ஞானம் என்ற ஒளியைப் பெற்றுக் கொள்'
என்று சொல்லாமல் தன் மூலமாக தெரியப் படுத்துகிறார். அந்தச் சூரியச் சக்தி solar energy- யினால் தான் உலகமே இயங்குகிறது. ஒரு நாள் சூரியன் இல்லையென்றால் உலகமே இருள் தான். மழை வருவதும் செடி கொடிகள் வளருவதும் நமக்கு உணவு கிடைப்பதும் இந்த ஆதவனால்தான். சூரியன் என்றாலே அப்பழுக்கிலாதத் தன்மை, ஒழுங்கு, perfection, ஒரே சீரான ஓட்டம், பிரதி பலன் பார்க்காமல் செய்யும் கடமை, எல்லோரும் சமம் என்ற நோக்கு, தன் ஒளியை எல்லோருக்கும் தந்து தான் இன்பமுறல் எல்லாம் நமக்குப்பார்க்கமுடிகிறது.
"தத்வ மஸி" என்ற தத்துவம் விளங்குகிறது. இந்த நன்நாளில் ஆதித்ய ஹிருதயமும், காயத்திரி மந்திரமும் ஜபித்தால்...அதனுடைய சக்தியே தனிதான்.

ஏழை தன் வியர்வை சிந்தி, ஒவ்வொரு துளிகளையும் தன் பயிருக்குள் அர்ப்பணித்து,
நமக்கு உணவாகக் கொடுக்கிறார்கள். அவர்கள் அந்த விளைச்சலுக்காக கடவுளுக்கு மறக்காமல், தங்கள் முதல் சாகுபடிக் கதிரை அர்ப்பணிக்கிறார்கள். நாம் இன்று நமக்கு உணவை வழங்கும் அவர்களை நினைத்துக் கொண்டு அவர்கள் பயன்படும்படி எதாவது நல்ல காரியம் செய்து ஒரு புது விதமாக பொங்கல் கொண்டாடலாமே!

அன்புடன் விசாலம்

No comments: