Friday, April 13, 2007

நடராஜா




நடராஜர் என்றாலே நடனத்திற்கெல்லாம் மன்னர்!
ஸ்ரீ தியாகராஜர் என்றாலும் நடனம் நிச்சயமாக இருக்கும்.


"நடராஜா...நடராஜா...நர்த்தன சுந்தர நடராஜா!
சிவராஜா...சிவராஜா...சிவகாமி பிரிய...சிவராஜா!"

என்ற பாட்டு ஒன்று உண்டு. நடராஜர் நடனம் ஆடிய இடங்கள் ஏழு, இதை சப்தவிடங்கள் என்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாக நடனம் ஆடி இருக்கிறார்{அவரிடமிருந்து தான் பரதக்கலை பிறந்தது}. அந்தந்த இடத்தில் அவரது பெயரும் மாறுகிறது, நடனத்தின் பெயரும் மாறுபடுகிறது.
திருவாரூரில்...ஸ்ரீ தியாகராஜரின் பெயர் வீதிவிடங்கர். அவர் ஆடும் நடனம் அஜபா நடனம். அதாவது மூச்சு இழுக்கும் போது ஒரு அசைவு வெளி விடும் போதும் ஆடும் நடனம்.
திருமறைக்காட்டில் ஸ்ரீதியாகராஜர் புவனிவிடங்கத் தியகராஜர் ஆகிறார். இவரது நடனம் ஹமச நடனம்.
அன்னப் பட்சிப்போல் மெல்ல அசைந்து அசைநது ஆடி வரும் நடனம் மந்த கதியில் ஆடுவார்.
திருநள்ளாற்றில் நகவிடங்கத்தியாகராஜர் எனப்படுகிறார். நகவிடங்கர் என்றால் பெரியமலை போல் விளங்குவது. இங்கு மூர்த்தி தானாகவே தோன்றியதால் சுயம்பு என்று அழைக்கப் படுகிறார். இவரது நடனம் உன்மத்த நடனம். உன்மத்தம் என்றால் பித்து அல்லது தன் நிலை இழத்தல் என்று சொல்லலாம்.
திருவாயமூரில் இவர் நீலவிடங்க தியாகராஜர் ஆகிறார். இவர் ஆடும் நடனம் கமல நடனம். அதாவது தாமரை மலர் நீரின் அசைவுக்கேற்ப பக்கத்தில் சாயாமலும், நிலைப் பெயராமலும் ஆடுவது.
திருக்காறாயிலில் ஆதிவிடங்க தியாகராஜர் ஆகிறார். இங்கு இவர் ஆடுவது குக்கூட நடனம். அதாவது கோழிபோல் நேரோட்டமும் பக்க ஓட்டமும் கொண்டு, ஓடி ஓடி நடனம் புரிவது.
திருக்குவளையில் அவனிவிடங்கத் தியகராஜர் என்று
அழைக்கப்படுகிறார். இங்கு ஆடும் நடனமோ பிரம நடனம் ப்ரம்ர என்றால் வண்டு, வண்டு எப்படி பூவைச் சுற்றி சுழன்று வந்து... தேனுக்காக வட்டமிடுமோ அதேப் போல் சுழன்று சுழன்று வரும் நிலை.
திருநாகைகாரோணத்தில் இவர் பெயர் சுந்தர விடங்க தியாகராஜர் என்று பெயர் பெறுகிறார். இங்கு இவர் ஆடும் நடனத்தின் பெயர் பாராவார தரங்க நடனம். தரங்கம் என்றால் அலைகள் கடல் அலை போல் மேலே,கீழே எழுந்து பின் சுருண்டு மடங்கி விழுந்தாடும்
நடனம். அந்தக் காலத்தில் திரு குமாரி கமலா இப்போது இருக்கும் டாக்டர். ஸ்ரீமதி பதமா சுப்ரமண்யம் ஆடும் நடனம் இதைப்போல் சுத்தமானது. பந்தணைநல்லூர் பாணி என்பார்கள்,

"காலைத்தூக்கி ஆடும் தெய்வமே!"என்றபாட்டு ஞாபகம் வருகிறது.


"ஓம் நமசிவாய"

அன்புடன் விசாலம்

No comments: