Tuesday, April 17, 2007

பள்ளி விடுமுறை

அன்பு குழந்தைகளே!
பரீட்சை எல்லாம் நன்றாக எழுதி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இதன் பின் லீவு நாடகள் வந்து விடும். அப்போது மஜாதான் காலையிலும் விளையாட்டு, மாலையிலும் விளையாட்டு, பின் டி வி சிறு வாக்குவாதங்கள் என்று நாள் போகும். இங்கு தான் சிறு மாறுதல் வேண்டும் குழந்தைகளே!

இவ்வளவு நாள் உங்கள் பெற்றோர் நீங்கள் பரீட்சைக்குபடிக்கும் போது கூட இருந்து எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள்?
நீங்கள் இப்போது உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து சந்தோஷப் படுத்தலாமே!
ஒருஅட்டவணைப் போட்டுக் கொள்ளுங்கள். அது சும்மா வேடிக்கைப் பார்க்க மட்டும் இல்லாமல் அதை நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டும். முக்கியமாக காலையில் தேகப் பயிற்சி
பிராணாயாமம் இடம் பெற வேண்டும். நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். படிக்கும் புத்தகங்களும் நல்ல அறிவு வளர்க்கும் புத்த்கங்களாக இருக்க வேண்டும். ஏதாவது விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற முயலவேண்டும்.

கடவுள் வணக்கம் காலையிலும் மாலையிலும் இடம்பெற வேண்டும் ஏதாவது ஒரு கலை கற்கலாம். மத்தியானம் வெயிலில் சுற்றாமல் வீட்டிலேயே கேரம் செஸ் போன்ற விளையாட்டும் அறிவு வளர்க்கும் அனிமல் ப்ளெனட் மற்ற விஞ்ஞானம் போன்ற டிவி படைப்புகள் பார்த்து அறிவை வளர்த்து கொள்ளலாம். எதாவது ஒரு மனதுக்கு பிடித்த சம்பவம் பற்றி வியாசம் எழுதலாம். கவிதையும் செய்து பார்க்கலாம். பெரியவர்களுக்கு ஏதாவது படித்து சொல்லியோ அல்லது தெருவைக் கடக்க உதவியோ பணிப்பெண்ணின் குழந்தைகளுக்கு ஆரமபக் கல்வியோ சொல்லிக் கொடுக்கலாம். அன்று இரவு நீங்கள் என்னன்ன நல்ல காரியம் செய்தீர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு பார்க்கவும். அதே போல் எந்த தகாத காரியம் செய்துள்ளீர்கள் என்றும் கணக்கு போட்டு பார்க்கவும். பொய் பேசுதல், பிறர் பொருளை எடுத்துக் கொள்ளல் கடும் சொல் பேசி மற்றவருக்கு மனம் வருத்தம் கொடுத்தல் என்பது பட்டியலில் வராது பார்த்து கொள்ளவேண்டும். பின் என்ன நீங்கள் ஒரு ideal student அதாவது ஒரு சிறந்த மாணவனாக புகழ் அடைவீர்கள். இந்த லீவு நாட்களில் சுற்றுலா மிகவும் முக்கியமாக கருதப்பட வேண்டும். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். சுற்றலாப் போக ரயில் வண்டி தான் சிறந்தது. நன்கு வேடிக்கைப் பார்த்தும் இயற்கையை ரசித்து கொண்டும் போகலாம். அதற்கான ரயில் பாட்டு ராமு பாடுகிறான் பார்க்கலாமா?

அன்புடன் அம்மம்மா விசாலம்

No comments: