Wednesday, April 4, 2007

நல்ல சரக்கு!

தெருவில் நடந்தேன்

ஒரு மாலை நேரம்,

காதில் விழுந்தது,

ஒரு மாதிரி பேரம்.

"சரக்கு இருக்காப்பா?"

"இருக்கையா"இது பதில்,

"உள்நாட்டு சரக்கா?

வெளி நாட்டு சரக்கா?"

"இரண்டும் தான்"

புரிந்தும் புரியாததுபோல்

மேலே நடந்தேன்,

காத தூரம் சென்றேன்.

காதில் விழுந்தது

ஒரு மாதிரி பேச்சு,

"சார்...சார்... சரக்கு வந்திச்சு"

"கிராமத்து சரக்கா?

நகரத்து சிட்டா?"

புரிந்தது இந்தப்பேச்சு

பரவும் எய்ட்ஸ்,

என் மனக்கண் முன்னால்...

ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தது.

வெற்றி புன்னகை பூத்தது!

மனம் நொந்து போனேன்.

மேலே நடந்தேன்.

நானும் ஒரு சரக்கு கேட்கலாமே!

நேரே ஒரு மளிகைக் கடை

"அன்பு என்னும் சரக்கு

இருக்காப்பா உன்னிடம்?"

கேள்வி பிறந்து வந்தது

ஏற இறங்கப்பார்வை

ஒரு பைத்தியத்தைக்

கண்டது போல அவன்

"போய்யா அந்தாப்லே

அங்கிட்டு நிறச்சு இருக்கு"

சிரித்து கொண்டேன் நான்.

கூப்பிடு தூரம் சென்றேன்.

நுழைந்தேன் மறு கடையில்

"கண்ணியம்,கட்டுப்பாடு,

சரக்கு இருக்காப்பா?"

"ஓ உண்டே..."

நக்கலாக பதிலும் வந்தது.

தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா

காலத்துக்கு போ...

நீ கேட்டது அங்கு கிடைக்கும்.

"கிடைக்கும்" என்ற நற்றலை

காதில் தேன் போல் விழ

நம்பிக்கையும் வந்தது.

அந்த நாள் நிச்சயம் திரும்பட்டும்.

இளைஞர்களே! அது உங்கள் கையில்.

அன்புடன் விசாலம்.

No comments: