Monday, April 9, 2007

நதியின்...தியாகம்!




நதியே உன் ஓட்டமென்ன?
வழியில் ஆடும் ஆட்டமென்ன?
பாம்பு போல் வளைகிறாய்,
உச்சியிலிருந்து விழுகிறாய்
மின்சாரம் தருகிறாய்,
திடீரென சுழலுகிறாய்,
சாதுவாகவும் ஆகிறாய்,
எவ்வளவு இடைஞ்சல் பார்க்கிறாய்
பொருட்படுத்தாமல் ஓடுகிறாய்,
கல்லும் முள்ளும் குத்த
கவலைப்படாமல் ஓடுகிறாய்,
ஒரு பாகுபாடு இல்லை
ஜாதி பேதம் இல்லை
எங்களுக்கு நீர் வழங்குகிறாய்,
சமுத்திரத்தில் கலக்கிறாய்
உனக்கென்று ஒன்றுமில்லை,
எல்லாம் தியாகம் செய்கிறாய்


அன்புடன்...அம்மம்மா விசாலம்

No comments: