Friday, April 6, 2007

கர்வா சௌத் விரதம்

கர்வா சவுத்!
இது ஒரு நோன்பு வட நாட்டில் பெண்களால் நூற்கும் நோன்பு.
ஆண்களுக்கு என்று எந்த நோன்பு இருக்கிறது? தெரியவில்லை
நம்முடைய காரடை நோன்பு போல் இதுவும் கணவரின் நீண்ட ஆயுள்
சுபீட்சத்திற்காகவும் நூற்கிறார்கள். முன்பு சிறு வயதில் மணம

ஆகிவிடுமாதலால் அந்தப் பெண்கள் தனக்கென்று உயிரைக் கொடுக்கும் அன்புத்தோழியை அடைந்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். அவர்களுக்கு தங்கள் மாமியாரிடமோ அல்லது வேறு புகுந்த வீட்டு உறவினர்களிடமோ பேச பயமும் சங்கோசமும் இருக்கும். ஆகையால் இந்த மாதிரி தோழிகளின் குழுவை ஆதரித்தனர்.
இந்த நோன்பு சரத் பூர்ணிமா முடிந்து சதுர்த்தி அன்று வரும், நமக்கு அன்று சங்கட சதுர்த்தி இருக்கும். chowth என்றால் சதுர்த்தி. அன்று அவர்கள் காலை சூரியன் உதித்த பின், தண்ணீர் கூட இல்லாமல் இரவு வரை இருந்து பின் சந்திரனைக் கண்டபின் சப்பிடுகிறார்கள்,
ஆனால் அன்று அவர்கள் ஜொலிக்கும் காட்சி சொல்ல முடியாது,
எல்லோரும் அப்படி ஒரு

அலங்காரம் செய்துக்கொண்டு வளைய வருகிறார்கள்.
பஞ்சாபி பெண்கள் தான் இதில் முதல் இடம். ,சினி நடிகை போல் பள பள
ஸாரியில்...அல்லது கல்யாணப் புடவை...காக்ரா சோலியில்...கை நிறைய
வளையல்களுடன், உதட்டில் சிவப்பு சாயத்துடன் கைகளில் மெஹந்தி
பல டிசைன்களுடன் கால்களில் அல்டா என்ற சிவப்பு வர்ணத்தை நலங்கு
போல் இட்டுக்கொண்டு ஆஹா! பார்க்க ரொம்ப ஜோர்தான், இதற்கு
வயது வரம்பு கிடையாது சிலர் தனக்குப் பொருந்தாததாக இருந்தாலும்,
தோசைக்கல் போன்று பெரிய காதணியை மாட்டிக் கொண்டு இருப்பார்கள். பாவம் காது பிய்ந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கும். அவர்கள் கணவர்களும் அதை ரசிப்பதால் மகிழ்சியாகக்

கொண்டாடுகிறர்கள். பின்னர் மாலை வட்டமாக உட்கார்ந்து, நடுவில் ஒரு பெரிய விளக்கு வைத்து பேணி என்ற விரத சேவை மற்ற
பல வித பழங்கள், கேசரி போல் பிரசாதம் வைத்து பூஜை ஆரம்பிக்கிறார்கள். கையில் ஒருதட்டில் கோதுமை மாவில்
செய்த விளக்கேற்றி நடுவில் வைத்து, அந்தக் கதையைப் பாட்டாகப் பாடி, ஒவ்வொருவராகத் தட்டை பெற்று ஆரத்தி எடுக்கிறார்கள் நானும் இதில் கலந்துக் கொண்டேன்.
அதன் கதை வீராவதி எழு சகோதர்களுக்கு நடுவில் செல்லப் பெண்.
ஒரு ராஜாவை மணம் புரிந்து கொண்டாள். ஒரு சில தினங்களில் தாய் வீடு சென்றாள். இந்த நோன்பை கணவரின் நலனுக்காக நூற்கலானாள். தன் அன்பு சகோதரி பட்டினி கிடப்பதைப் பார்த்து சகியாமல், சகோதரன் ஒரு கண்ணாடியை காட்ட அதன் பிரதிபிம்பம் மரத்தின் இடுக்கு வழியாகத் தெரிய, வீராவதி சந்திரன் என்று நினைத்து நோன்பை முடித்து சாப்பிட்டாள். அவள் கணவன் இதனால் உடல் நலம் குன்ற மிகவும் மோசமாகி இறந்து விடுகிறான். பின் இடைவிடாப் பிரார்த்தனையில் சிவன் பார்வதி வர வீராவதி மனமுருகி மன்னிப்புக் கேட்க கணவன் பிழைத்து எழுகிறான்.
அன்றிலிருந்து கடும் விரதமாக சந்திரனைப் பார்க்கும் வரை பட்டினி கிடக்கும் கொள்கை வந்ததாம். நம் சாவித்திரி சத்தியவான் நோம்பு ஞாபகம் வந்தது. எது எப்படியோ ஒரு நாள் வயிறுக்கு ஓய்வு நல்லது தான். தவிர வளை வியாபாரி, மருதாணி போட்டு பிழைக்கும் கூட்டம்,

துணி வியாபாரிகளுக்கு இந்த நாள் வரும்படியில் ஒரு சிறப்பு நாள்.
இது போல் இதற்கு இன்னும் இரண்டு புராணக் கதைகள் உள்ளன
உங்களுக்கு போரடிக்குமோ என்ற பயத்தால் எழுதவில்லை.


அன்புடன் விசாலம்

No comments: