Friday, April 20, 2007

தேவி தரிசனம் விளக்கில




சேவித்தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக்கிரீடங் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக்கொண்டைக் கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன் தாழைமடல் சூடக்கண்டேன்
பின்னழகு கண்டேன் பிறைப்போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதக வென ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன்
அன்னையே அருந்துணையே அருகிலிருந்து காருமம்மா
வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா,
தாயாராம் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்...
நெய் விள்க்கு மிகச் சிறந்த ஒன்று! அதை ஏற்றி மனமுருக இந்தப் பாட்டை பாட தேவியின் அருள் நிச்சயம் கிடைக்கும்

அன்புடன் விசாலம்

3 comments:

Unknown said...

You seems to have lot of tamil literature interest. Hats off.
Mohan
Coimbatore

பாலராஜன்கீதா said...

//அன்னையே அருந்துணையே அருகிலிருந்து காருமம்மா//

அன்புள்ள அம்மா,

இந்த வரியின் இறுதிச் சொல்லின் பொருள் என்ன என்று தயவு செய்து எழுதுங்கள்

Meerambikai said...

காப்பாற்று அம்மா! என்பதே பொருள்