Saturday, April 7, 2007

அதிசயம்..! ஆனால் உண்மை!



இந்த ஆஞ்சநேய ஜயந்தியின் போது என் வாழ்க்கையில் முன்பு நடந்த அஞ்சநேய ஜயந்தி அன்று நடந்த உண்மைச் சம்பவம், நம்பும் ஆன்மிக அன்பர்களுக்கு எழுதுகிறேன். நான் தில்லியில் பாலம் விஹார் என்ற இடத்தில் இரண்டு வருடங்கள் இருந்தேன். தில்லி விமான நிலயத்திற்கு அருகில் உள்ளது முதலில் இருந்த இடம் கரோல் பாக் அங்கு பல கோவில்களுக்குப் போய் பழக்கப்பட்ட எனக்கு இங்கு வந்ததும் ஒரே ஒருகோவில் வீட்டின் அருகிலேயே இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன், அந்தக் கோவிலின் சொந்தக்காரர் தன் நிலம் சொத்து எல்லாம் கோவிலுக்கே அர்ப்பணித்து இருந்தார்.பிரம்மசாரி, அடிக்கடி மௌன விரதத்தில் ஆழ்ந்து விடுவார். எனக்கு அந்தக் கோவில் விட்டால் வேறு மிகத் தொலைவில் இருந்ததால் அங்கு அடிக்கடிப் போய் கோலம் போட்டு விளக்கும் ஏற்றி அந்த குருஜியிடம் சதசங் செய்து பஜன் முடித்து வருவேன் அன்று ஹனுமத்ஜயந்தி குளிர் அதிகமானதாலும், பள்ளியில் வேலை பளு அதிகமானதாலும் வெகு தொலைவில் இருக்கும் கனாட் பிளேஸ் ஹனுமான் கோவிலுக்குப் போக முடியவிலலை, ஆகையால் மனம் உருகி வேண்டி தரிசனம் எனக்குத் தருவாயா? என்னால் கோவில் வரமுடியவில்லையே என்று ஏக்கத்துடன் கேட்டேன். பின் அந்த அருகில் இருக்கும் ராமர் கோவிலுக்குப் போய் வரலாம் என்று போய் வந்தேன். வரும்போது ஆஞ்சநேயா.. வீரா, ஹனுமந்த... சூரா, வாயுக் குமாரா... வானர வீரா.. என்ற பாட்டைப் பாடி வந்தேன். என்ன ஆச்சரியம் என் வீட்டு வாசல் இரும்புக் கேட்டின் முன் ஒரு பெரிய வானரம் சுமார் 5 அடி வரை இருக்கலாம், அவ்வளவு பெரியது நான் பார்த்ததே இல்லை.சாதாரண வானரமாக இல்லாமல் வயிறுப் பக்கம் வெள்ளைக் கலருடன் இருந்தது. கையில் ஒரு பெரிய சூரியக் காந்திப் பூ இருந்தது.மிகஅழகாக கை கூப்பிய நிலையில் நான் பார்த்துப் பரவசமானேன். என் கணவர் அதை விரட்ட ஒரு கொம்புக் கொண்டு வந்தார் நான் தடுத்து விட்டேன். என் அனுமான்கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்று மகிழ்ச்சியால் என் கையில் இருந்த வாழைப்பழம் தந்தேன். சாதாரணமான வானரம் என்றால் கையில் கொடுப்பதற்குள் தனாகவே பிடுங்கிக் கொண்டு ஒடிவிடும் ஆனால் இங்கு அதை எடுக்காமலே அருகில் இருக்கும் ராமர் கோவில் வரை நடந்து போயிற்று. பின் அதை காண்வில்லை! அந்தக் கோவிலுக்கு திரும்பவும் போனேன், அந்த குருஜி மௌனவிரதம் இருந்தார் ஆகையால் எழுதிக் காண்பித்தேன் அவர் ஒரு வானரமும் இங்கு வரவில்லை என்று எழுதிக் காட்டினார். நான் நிச்சயமாக ஆஞ்சநேயரைக் கண்டிருக்கிறேன்.ஸ்ரீ ராமருக்கு நன்றி தெரிவித்தேன். என் வாழ்க்கையில் மிகவும் மனதில் பதிந்து விட்ட மறக்க முடியாத ஒன்று.


அன்புடன் விசாலம்

No comments: