Wednesday, April 4, 2007

பெண் மனம்

ஒரு விஷ்ணு பக்தன் விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கக் கடும் தவமிருந்தான்.அவன் பிரியப்பட்டது போலவே விஷ்ணுவும் தோன்றினார் உண்மை மனதோடு அழைத்தால்
ஓடிவரும் கண்ணனாயிற்றே!

"பக்தா...உன் பகதிக்கு மெச்சினேன் என்ன வேண்டும் கேள்?"என்றார். அவன் இத்தனை சீக்கிரம் அவரை எதிர்பார்க்கவில்லை எல்லா
நாளேடு பத்திரிக்கைகளிலும் த்ன் பெயர் வரவேண்டும் என்பது அவன் ஆசை. மேலும், அவனுக்கு ரொம்ப நாட்களாக சந்திர மண்டலத்திற்கு போக ஆசை. ஆகையால் விஷ்ணுவிடம் கேட்டான்

" ஸ்வாமி நான் இருக்கும் இடத்திலிருந்து சந்திர மண்டலம் வரை ஒரு நல்ல ரோடு ஒன்று போட்டுத் தர வேண்டும் நான் சந்திரனைப் பார்க்க வேண்டும்"
பகவான்:"என்னப்பா புது மாதிரியாகக் கேட்கிறாயே CEMENT விற்கும் விலையில் இது சாத்தியமா மேலும் இது முடிக்க பல ஆண்டுகள் ஆகுமே உனக்கும் நீண்ட ஆயுள் இருக்க வேண்டும் வேறு ஏதாவது கேள்,

பணம் வேண்டுமா? தங்கம், வீடு, மன அமைதி என்ன வேண்டும்?"
விஷ்ணு பக்தன் தலையை சொறிந்துகொண்டு யோசித்தான்.

"சரி ஸ்வாமி நான் வேறு ஒன்று கேட்கிறேன் தருவீர்களா?"
"கேளப்பா பக்தனே" என்றார் விஷ்ணு.
"நான் பெண்களின் மனதைப் புரிநது கொள்ள வேண்டும். அந்த சக்தியை அளிப்பீர்களா?"
கடவுள் திகைத்தார்,கூறினார் "பக்தா நீ முதலில் கேட்டதையே செய்து தருகிறேன்"
இதை ஜோக்காக எடுத்துக் கொள்வதா?, இல்லை பெண்களின் பெருமையாக எடுத்துக் கொள்வதா?

அன்பு என்ற ஒன்றினால் எல்லாமே புரிந்து கொள்ள முடியுமல்லவா?

அன்புடன் விசாலம்

No comments: