முகல் சாம்ராஜ்யத்தில் மது, மாதுவுக்கு தனி சிறப்பிடம் உண்டு, அவர்கள், மது கிண்ணங்கள் பல வேலைப்பாடுகளுடன் பார்க்கவே மிக அழகாக இருக்கும். நான் பள்ளி மாணவிகளுடன் ஒரு தொல்காட்சி
நிலையம் சென்றிருந்தேன். அங்கு ஜஹாங்கீர் ஷாஜஹான் உபயோகித்த மது ஜாடிகளையும் கோப்பைகளையும் கண்டு பிரமித்துப் போனேன். எல்லாம் தங்கம், வெள்ளியில் கலிங்கா ஃபிலிக்கிரி என்ற மிக நுட்பமான
வேலைப்பாடுகளுடன் தாஜ்மஹலில் இருக்கும் டிசைன் போல் பூக்களால் இசையப்பட்டு இனாமல் கலையும் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் முகல் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர் பாபர். அவர் ஒரு சமயம் தனக்கு இணையான பெரிய வீரரான ராணாசிங்கனை போருக்கு அழைத்தார். கணுவா என்ற இடத்தில் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. மிகப் பெரிய போர், இரு தரப்பிலும் கடுமையானசேதம் ஏற்பட்டது. பல பேர்கள் மாண்டனர், கடைசியில் இராணாசிங்கன் வெற்றி பெற்றான். பாபருக்கு படு தோல்வி ஏற்பட்டது. எல்லா சைன்யங்களும் சிதறி ஓடுவதைப் பார்த்தும் கண்நேரே அழிவதையும் பார்த்து பாபர்மனம் ஒடிந்து போனார். மனம் கலங்கினார் சம்ராட் அசோகன் போல் உடனே சபதம் எடுத்துக் கொண்டார்.
என்ன சபதம்? "இன்றைய தினத்திலிருந்து நான் மதுவைத் தொடமாட்டேன்," அவருடைய மது கிண்ணங்கள்
எல்லாம் தங்கத்திலும் வெள்ளியிலும் இருந்தன. எல்லா மது கோப்பைகளையும் உடைத்து வீசி எறிந்தார்.
தங்கத்துண்டுகளையும் வெள்ளித்துண்டுகளையும் தானம் செய்துவிட்டார்,
அவருடன் அவருடைய சிப்பாய்களும் சபதம்.
எடுத்துக் கொண்டனர் பாபர் கடைசிவரை சபதத்தைக் காப்பாற்றினாராம்.
விசாலம்
No comments:
Post a Comment