Wednesday, April 4, 2007

மலர்களின் சிறப்பு



அன்னைக்கு...

மலர்கள்... சமர்ப்பணம்..!
மலர்கள்...

அவை மலரும் போது தன் மணத்தைத் தன்னிடமே மட்டுமில்லாமல்
எல்லோருக்கும், எல்லாஇடத்திலும் பரப்புகிறது. அதே போல் வாழ்க்கையில், மலர்ச்சி தேவை.
நல்ல மணத்துடன் உண்டான மலர்ச்சி.

அதை தனக்கென்று மட்டும் இல்லாமல்,
எல்லோரிடத்திலும் பரப்ப வேண்டும். தன் நலமற்ற சேவையில்... வாழ்க்கையும் மலர்போல் மலர்ந்து மணம் வீசி நம் ஜீவனை மலரச் செய்கிறது.
மலருக்கும் உணர்வு உண்டு என்றும் நாம் வேண்டும் பிரார்த்தனைகளை அந்த இறை சக்தியிடம் அனுப்பி வைக்கும் சக்தி அவைகளுக்கு உண்டு என்று அன்னை கூறுகிறார்.
நாம் தினமும் மலர்களைச் சேகரம் செய்து அழகாக அடுக்கி அன்னையிடம் வைத்து, நம்பிக்கையுடன் வழிபட்டு அவளிடம் சமர்ப்பித்தால் வாழ்க்கை
மேம்படும்.
இப்போது எந்தெந்தப் பூக்கள் எந்தெந்த் சூழ்நிலையில் வைத்தால் பலன் கிடைக்கும்எனப் பார்க்கலாம் .


செலவம் செழிக்க -- அல்லிப் பூ
லட்சுமி கடாட்சம் பெற --நாகலிங்கப்பூ
உடல் நிலை சரியாக -- பூவரசம்பூ
மரணத்திலிருந்த பிழைக்க -- வாடாமல்லிப்பூ நோயாளியின் தலைகாணியின் கீழே வைக்கலாம். மரணமில்லா பெருவாழ்வு என்பதை வாடாமல்லி குறிக்கிறது.
உடம்பில் சக்தி பெருக, தெம்பு அதிகரிக்க -- சாமந்திப்பூ
முன்னேற்றம் தடப்படுகிறதா? -- நித்யக் கல்யாணி மலர்
வீட்டில் கருத்து வேறுபாடா கணவன் மனைவியின் ஒற்றுமைக் குறைவா --கொடிரோஸ். கொடிரொஸ் மலர்...சுமுகம் குறிக்கிறது.
பக்தி மேலோங்கவேண்டுமா? -- பவழமல்லி மலர்
பாதுகாப்பு வேண்டுமா? --காகிதப்பூ
நாம் வெளியே போகும் போது அல்லது ஊருக்கு செல்லும் போது வெள்ளைக் காகிதப்பூவை ஒரு கவரில் கட்டி வீட்டில் தொங்க விட்டு சென்றால் நல்ல பாதுகாப்பு கிடைக்கும். திருட்டு பயம் இருக்காது.
விவேகம் வேண்டுமா? -- தூங்குமூஞ்சி மரத்தின் பூ
துன்பங்கள் தீரவும் மனதில் தைரியம் வள்ர --எருக்கம்பூ
ஆன்மீகச் சூழல் வேண்டுமா? -- வேப்பம்பூ
இன்னும் நிறைய பூக்களின் பலன் இருக்கிறது
அதைப் பிறகு சொல்கிறேன்
பூக்களை வைத்து அதன் பலனைப் பெறுங்கள்
அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்


அன்புடன் விசாலம்

No comments: