Monday, April 2, 2007

யார் அந்தக் குள்ளன்?

நண்பன் வீட்டில் குதூகலப் பேச்சு,
நேரம் தான் எப்படி ஓடிப் போச்சு?
சுற்றிப் போனால் வீடு தூரம்,
குறுக்கு வழியில் மனது பாரம்,
வானம் இருண்டது, துணையுமில்லை
ஒரே இருள் சூழ, விளக்குமில்லை ,
மாலை முடிந்து இருளும் வந்தது,
மழையும் மேகமும் திரண்டு வந்தது,
என் நடையை நான் வேகமாக்க,
ஒரு முண்டாசுக்காரனை நடுவில் பார்க்க
சொன்னான் அவன்

"இந்தாகிலேபோகாதீங்க
பேய்னு சொல்லுறாங்க"

நடுக்கம் கண்டது உடலிலே
தொடர ஆசை மனதிலே,


"பேயாவது பிசாசாவது
என்ன செய்யப் போவது அது?"

என் எண்ணம் பலமாய் வலுக்க,
துணிச்சல் அதிகம் பெருக்க
நடையைக் கட்டினேன்,
மேலே தொடர்ந்தேன்,

சலக் சலக் என்ற சத்தம்
கலங்கியது என் சித்தம்
கண்டேன் ஒரு பிரகாசம்
லாந்தரில் ஒரு வெளிச்சம்,
வந்தான் ஒருவன் மிக குள்ளமாக
அன்புடன் அழைத்தான் பொறுப்பாக

"நான் வழி காட்றேன் சார்,
பயமில்லாமல் வாங்க சார்"

குனிந்த தலை நிமிரவில்லை,
குரலில் ஒரு பிசிறும் இல்லை.
எங்கும் மௌனம் பின் நடந்தேன்
மனம் கனக்கப் பேச்சுக் கொடுத்தேன்

"உண்டா இங்குப் பேயின் நடமாட்டம்"

"கவலையா? விடுங்கள் முகவாட்டம்
நான் இருக்கேனே விளக்குடன்
மேலே நடங்கள் பலத்துடன்,"

எல்லைக்கோடும் வந்தது,
எனக்கும் துணிச்சல் வந்தது

"குனிந்த தலை நிமிராது
உதவும் நீ யாரப்பா?"

"ஹா..ஹா..ஹா..!"பேய்ச்சிரிப்பு வெடித்தது
விளக்கைத்தூக்கி மேலே பிடித்தது
முகம் தான் இருக்க கண் மூக்கு வாயுமில்லை,
நான் கீழே விழுந்தேன் எனக்கு மூச்சுமில்லை
இப்போது நான் குள்ளனுக்கு நண்பனானேன்
முகமில்லாத ஒரு பேயானேன்,
கட்டிலிலிருந்து கீழே விழுந்தேன்
எல்லாம் கனவு என்றும் உணர்ந்தேன்
பேயின் நாவல் படித்த விளைவு
கொடுக்கப் போனேன் இதற்கொரு களைவு .
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்புடன் விசாலம்

No comments: