Monday, April 2, 2007

"நம்பிக்கை"எனும் பள்ளியிலே...



ஆசிரியர் தினம் முடிந்தது நான் ஒரு ஆசிரியை [ஹெச். எம்] ஆனாலும் நான் ஒரு மாணவிதான் அதுவும் இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் பள்ளியின் பெயர் "நம்பிக்கை"
இதில் சேர ஒரு டொனேஷனும் இல்லை interview வும் இல்லை வியப்பு என்னவென்றால் நான் இதில் சேரும்படி ஒரு அன்பு வேண்டுகோள் கிடைக்க சேர்ந்துக் கொண்டேன்.
எங்கள் ப்ள்ளியின் முதல்வர் +ராமா என்பவர். ரொம்ப கருணைமிக்கவர். முகத்தில் எபோதும் ஒரு சாந்தம். அனுமானின் பக்தர் ஆனால் அடிக்கடி வனவாசம்...! இல்லை...இல்லை... நகரவாசம் போய்விடுகிறார்.
வேலை பளு பாவம் அவர் என்ன செய்வார்? போனாலும் தன் கடமையை சரியாக செய்து வருகிறார். இந்தப் பள்ளியில் பல பேர்களை நான் பார்த்ததில்லை. ஆம் சொல்ல மறந்துவிட்டேனே!
இது கணினிவழியாக நடத்தப்படும். என்னை பொறுத்த மட்டும் ஒரு
பள்ளி. இங்கு நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்.
எனக்கு ஒரு ஆசான் உண்டு அவரைப் பார்த்து பேசி இருக்கிறேன். அவர் பெயர் திரு காழியூரார் அவர்கள் வயதில் என்னைவிட சின்னவர் ஆனாலும் அவர் ஒரு சித்தர் என்று என் மனம் கூறுகிறது. எல்லாவிதமான ஆன்மீக சந்தேகங்களுக்கும் அவர் பொறுமையாக பதில் தருவார்.
ஒரு சமயம் தேவியிடமிருந்து ஞானப்பால் உண்டு இருப்பாரோ?
ஒரு தமிழ் வாத்தியார் உண்டு, கொஞ்சம் கண்டிப்பு ஆங்கிலம், தமிழுக்கு இடையே நுழைந்தால அவருக்கு ஆகாது! நாசூக்காக அதைப் புரியவைப்பார். என் எழுத்து பிழையும் சரி செய்து கொடுப்பார் அவர்தான் மஞ்சூர் ராசா அவர்கள். அவரால் என் தமிழ் மேலும் வளரும்.
ஒரு சில வெண்பா இயற்றும் ஆசிரியர்களும் உண்டு! அதில் ரமணன் என்பவர் எந்த தலைப்பிலும் வெண்பா இயற்றி விடுவார். பாடுவதிலும் சிறந்தவர் அவர் பாட்டைக் கேட்டிருக்கிறேன் அழகான குரல் நல்ல, சுருதி லயம் இசைக் கேட்டுப் பரவசமானேன்.
பெண்களிலே பரமேச்வரி திருமதி விஜி, மீனா, இவர்கள் எழுத்தும் எனக்கு மிக பிடிக்கும்.பாசத்தை பொழிவார்கள்.
சில குறும்பு மாணாக்கர்களும் உண்டு! ஆனால் அவர்கள் குறும்பு மிக ரசிக்கும் தன்மையாக இருக்கும். சிவசங்கர்,சுரெஷ், உமாநாத், நிலாரசிகன், தியாகு, வினோத், ராஜூவிக்னேஷ் எல்லோரும்
வருங்கால பாரதத்தை வளமாக ஆக்கும் ஆற்றல் பெற்ற இளைஞர்கள். அவர்களிடமிருந்தும் நிறையக் கற்றுக்கொள்கிறேன்.
முதல்வர் ராமா முதலில் இது ஒரு ஆன்மீகப் பள்ளி என்றுதான் கூறினார். ஆனால் சில சமயம் எல்லாம் கலந்த மிக்சராகி விடுவது வழக்கம். பரவாயில்லை உலகத்தோடு ஒட்டி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கு லீவு எடுப்பது மிக சுலபம் யார் வேண்டுமானாலும் லீவு எடுக்கலாம். முதல்வர் கண்டு கொள்ள மாட்டார்.
திரு நடேசன் ஒரு நல்ல ஆசிரியர் அவர் எல்லோருக்கும் மனம் உருகி பிரார்த்தனைச் செய்வார். இங்கு எனக்கு ரொம்ப பிடித்தது பிரார்தனைக்கூட்டம் எல்லோருடைய நலத்திற்கும் கூட்டுப் பிரார்த்தனை செய்யும் போது அந்த சக்தியே மிகவும் சக்தி வாய்ந்தது.
தவிர போட்டிகளும் வைத்து எங்களை ஊக்குவிக்கிறார்கள்.
பரிசும் உண்டு.
நிலாரசிகன் ஒரு கவிஞன் பெயரைப பார்த்தாலே தெரிகிறது
இல்லையா? நிலாவை அவர் ரசிக்கிறார் நாம் அவர் கவிதைகளை ரசிக்கிறோம். கவிதைகள் நிலாவைப்போல் குளிர்ச்சியாக இருக்கிறது
அடுத்தது சுரேஷ் நான் பார்த்து பழகி இருக்கிறேன். உயர்ந்த சிந்தனைகள். உயர்ந்த செயல்கள். தவிர அவரது கவிதைகள் சமூகத்தில் நடக்கும் சம்பவத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டி
அப்பப்பா...அவர் கவிதைகளுக்கு நான் தலை வணங்குகிறேன் pen is mightier than sword ,,,
என்பதை ஊர்ஜிதம் செய்து இருக்கிறார் சமூக சேவை மனப்பான்மை மிகவும் உண்டு.
அவரிடமிருந்து நிறைய கல்வி எனக்கு கிடைக்கிறது.
அடுத்தது நான் பார்த்த பேரில் விஷி என்னும் விசுவநாதன். அப்பா அந்த அன்பு கொண்ட முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது தெய்வத்தை அவன் முகத்தில் கண்டேன் அவர் புத்திக்கூர்மையைச் சொல்வதா? இல்லை பணிவைச் சொல்வதா?
மொத்தத்தில் அவர் ஆன்மா ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. அவரைப் பெற்ற தாய் தந்தையை வணங்குகிறேன்.
குமரன் மாலி ரொம்ப அழகாக தமிழ் மொழி பெயர்ப்பார், பஜகோவிந்ததை எழுதி வருகிறார்
விழியன் பக்கம் என்று உமாநாத் நல்ல கவிதகளை எழுதி வருகிறார்.
ரிஷி ரவீந்திரன் முதலிலேயே எனக்கு பழக்கம் ஆல்பா மைண்ட் பவரில் நாங்கள் படித்த போது அவரை எனக்குத் தெரியும் ரொம்ப சாந்தமானவர் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உண்டு இந்தத் தடவை சிறந்த கதைக்குப் பரிசு பெற்றிருக்கிறார்.
எல்லா மாணவர்களும்வெற்றியுடன் அதிகமா மார்க் எடுத்து பிரின்ஸ்பால் ராமாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறார்கள்.
திரு ராமா அனுமான் பக்த்ரானதால் அவரைப் போல் பக்தி, வீரம் பராக்கிரமம் அடக்கம் பணிவு எல்லாம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
ஆகையால் நாமும் அவருக்கு உறு துணையாக நின்று வெற்றி நடை போடுவோம். வாழ்க நம்பிக்கை பள்ளி வளர்க நடத்திவரும் ஆசிரியர்கள்.
விசாலம்

1 comment:

rishi said...

உங்கள் பதிவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது...வலைப்பதிவும் அருமை....

அன்புடன்
ரிஷிரவீந்திரன்.