Wednesday, April 4, 2007

"முத்தமிழ்" வாழ்த்துக்கள்!



அன்பு முத்தமிழ் குழுவினரே! அன்பு வணக்கங்கள். அனுமன் தாசனின் அன்பு அழைப்பால் நம்பிக்கையில் நுழைந்த எனக்கு இப்போது அன்பு ராசாவின் அழைப்பால் முத்தமிழில் வலது கால் வைத்து நுழைந்து இருக்கிறேன். தமிழில் அங்கு இருக்கும் மேதைகள். ஜாம்பவான், இவர்களுக்கு முன்னாடி எனக்கும் ஒரு இடமா? உங்கள் அனைவரின் ஆதரவு இருக்கும் வரை என் எழுத்தும் தொடரும்... முத்தமிழுக்கு என் வாழ்துக்கள்!
முத்தமிழ் என்ற பெயர்தான் ஏனோ?
இந்த சந்தேகம் வந்ததும் ஏனோ?
முத்தை ஒத்தத் தமிழைப் பரப்பவா?
மூவேந்தரால் சிறக்கப்பட்டத் தமிழ்த்தாயை வாழ்த்தவா?
இயல், இசை நாடகத்தின் சிறப்பைத்தான் சொல்லவா?
சங்கத்தமிழ் படப்புக்களை பேரிகைக் கொட்டி முழங்கவா?
சுருதிபிசகாமல் வேற்றுமை இன்றி வெற்றிநடை போடவா?
ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் செயல்படுத்திக் கொடுக்கவா?
கவிதைவழியாக இதயம் தொட்டு அன்பு வாசல் திறக்கவா?
உள்ளம் தெளிந்து விட்டுக் கொடுக்கும் தன்மையை வளர்க்கவா?
ஓடும் உதிரம் எல்லாம் சிவப்பு என்ற உண்மை உணர்த்தவா?
தமிழ்த்தாயை கண்முன் நிறுத்தி ஆராதனை செய்யவா?
முத்தமிழ் பெயர்தான் ஏனோ? அறிந்து கொள்ளும் ஆசையும் ஏனோ?
மும்மூர்த்திகளின் வாழ்த்தும் இங்கே.
முத்தேவியரின் வாழ்த்தும் இங்கே,
முத்தமிழுக்கு வாழ்த்தும் இங்கே
அதை நடத்தும் குழுவுக்கு வாழ்த்தும் இங்கே...

அன்புடன்,

அன்னையின் ஆசிகளுடன் விசாலம்

No comments: